உனக்கு கேட்க துப்பில்ல.! கடைசில மதுவை ஏத்திவிட்டது யாருனு வீடியோவை பாருங்க புரியும்.!

0
15740
Sandy
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் மது மற்றும் சாண்டியின் மோதல் தான் ஹைலைட்டாக அமைந்திருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மிகவும் ஓவராக கலாய்க்கிறார் என்றும், மற்றவர்களை கலாய்க்கும் அவர் அவரை கலாய்த்தல் ஏற்றுக்கொள்ளவதில்லை என்று மதுமிதா கூறியிருந்தார்.

-விளம்பரம்-
sandy madhu

அதே போல மதுமிதாவை அடிக்கடி குள்ளம் குள்ளம் என்று கூறி சாண்டி கிண்டலடிப்பதாக கத்தினார் மதுமிதா. ஒரு கட்டடத்தில் கோபத்தின் உச்சிகே சென்ற மதுமிதா, ஒருவர் கஷ்டப்படுவதை பார்த்து சிரிப்பவர் எல்லாம் ஆம்பளையா, த்து என்று மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த துவங்கினார். இதனால் கொஞ்சம் கடுப்பான சாண்டி’வார்த்தைய கொஞ்சம் பாத்து பேசு ‘.என்றார்.

இதையும் பாருங்க : சாண்டியை எல்லை மீறி பேசிய மது.! கடுப்பான சாண்டியின் முன்னாள் மனைவி காஜல்.! 

- Advertisement -

இறுதியில் சாண்டி, கவின் மன்னிப்பு கேட்க சொன்னதால் மதுமிதாவிடம் சென்று மன்னிப்பு கட்டார். இந்த நிலையில் மதுமிதாவை ஏற்றி விட்டது யாருனு பார்த்தால் நம்ம சரவணன் தான் என்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று அனைவரும் எண்ணியது என்னவெனில் மது ஏன் திடீரென்று சாண்டியை கத்தினார். உண்மையில் அவர் கோபப்பட வேண்டும் என்றால் அவர் முகத்தில் பேஸ்ட் போட்டு விட்ட சாக்க்ஷியை தானே கத்த வேண்டும் என்று தான் தோன்றியது. அது போல மது கத்தும் போது என்னை ஏன் குள்ளம் என்று கிண்டலடிகிறீர்கள் என்று அடிக்கடி சொன்னார்.

-விளம்பரம்-

அதே போல கவின், சாண்டியிடம் சென்று நீங்க ஏன் குள்ளம் என்று சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, அனைவரும் தானே சொன்னார்கள் என்றார் சாண்டி. இதிலிருந்தே மதுமிதாவிற்கு சாண்டி ‘குள்ள நாட்டாமை ‘ என்று சொன்னது தான் பிரச்சனை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால், அதனை சரவணன் சொன்னதால் தான் மதுவிற்கு அந்த வார்த்தை இன்னும் ஆழமாக பதிவாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement