சாண்டியை எல்லை மீறி பேசிய மது.! கடுப்பான சாண்டியின் முன்னாள் மனைவி காஜல்.!

0
17442
Madhu
- Advertisement -

பிக் பாஸ்யின் நேற்றைய எபிசோடில் மது மற்றும் சாண்டிக்கு இடையே பெரும் சண்டை வெடித்தது. வனிதா பிறகு பிக் பாஸ் வீட்டில் சண்டையே இல்லை என்று பீல் செய்து வந்தவர்களுக்கு நேற்று மதுமிதா போதும் போதும் என்ற அளவிற்கு பிக் பாஸ் வீட்டையே இரண்டாக்கி விட்டார்.

-விளம்பரம்-

மதுமிதாவிற்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதாவிற்கு முகத்தில் பேஸ்டை பூசிக்கொண்டு ‘மாரியம்மா மாரியம்மா’ பாடலுக்கு நடனமாட சொன்னார்கள். அதற்க்கு முதலில் சிரித்தபடி ஆடத்துவங்கினார் மதுமிதா, அப்போது சாண்டி ‘கொஞ்சம் ஹேவியா ஆடு’ என்று கூறிக்கொண்டே இருந்தார்.

- Advertisement -

சாண்டி மீண்டும் மீண்டும் ‘ கொஞ்சம் ஹேவியா ஆடு ‘ என்று கூறிக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான மதுமிதா சீக்கிரமா சொல்லுங்க எனக்கு மூஞ்செல்லாம் எரியுது என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அப்போது சாண்டி எரியுதா என்று எதார்த்தமாக கேட்க கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் மதுமிதா.

-விளம்பரம்-

இதனால் சாண்டியை கண்ட மேனிக்கு திட்டத் துவங்கினார் மதுமிதா. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிகே சென்ற மதுமிதா, ஒருவர் கஷ்டப்படுவதை பார்த்து சிரிப்பவர் எல்லாம் ஆம்பளையா த்து என்று மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த துவங்கினார். இதனால் கொஞ்சம் கடுப்பான சாண்டி’வார்த்தையா கொஞ்சம் பாத்து பேசு ‘என்றார்.

மதுமிதாவின் இந்த செயலால் ரசிகர்கள் பலரும் அவர் மீது கடும்கோபத்தில் உள்ளாகினர். இருப்பினும் ஒரு சில ரசிகர்களோ மதுமிதாவின் கோபம் நியாயமானது தான் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி மதிப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார் அதில் மது வார்த்தையை பார்த்து பேசு காரித் துப்ப என்று கோபமாக ஒரு சுமையையும் பதிவிட்டுள்ளார்

Advertisement