பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் உள்ளே வரப்போகும் போட்டியாளர்.! பிக் பாஸ் வீடே அதிரப்போகுது.!

0
69421
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு திருப்பங்கள் நடந்தேறி வருகிறது. சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டது என பல்வேறு சர்ச்சையான விடயங்கள் நடந்தேறியது.

bigg-boss

சரவணன் வெளியேறிய அடுத்த வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கஸ்தூரி ஒய்ல்டு கார்ட் போட்டியாளராக அழைத்து வரப்பட்டார். ஆனால், கஸ்தூரியின் என்ட்ரி நிகழ்ச்சின் ஸ்வாரஸ்யத்தை கூட்ட சிறிதும் பயன்படவில்லை. இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவை சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் அழைத்து வந்தனர்.

- Advertisement -

வனிதா வந்த பிறகு நிகழ்ச்சியில் கொஞ்சம் சுவாரசியம் கூடியதாலும், கடந்த இரண்டு வாரத்தில் 4 போட்டியாளர்கள் வெளியேறியதாலும் வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துவிட்டது பிக் பாஸ். இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருப்பதால் வரும் வாரங்களில் இரண்டு ஓய்ல்டு கார்டு போட்டியாளர்களை பிக் பாஸ் களமிறக்க இருக்கிறதாம்.

Madhumitha

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய மதுமிதா மீண்டும் ஒயில்டு கார்டு போட்டியாளராக வர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை மதுமிதா உள்ளே சென்றால் நிகழ்ச்சியில் நிச்சயம் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் சந்தேகமில்லை.

-விளம்பரம்-
Advertisement