என்னது சோம் சேகரை போல ரியோவும் செல் போனை பயன்படுத்தினாரா ? எழுந்த புது சர்ச்சை.

0
9478
rio
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் நிச்சயம் சர்ச்சைக்கு என்றும் பஞ்சமிருக்காது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு Scripted நிகழ்ச்சி அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு பல வசதிகள் உள்ளே இருக்கும் என்று மக்கள் மத்தியில் இன்றும் பேச்சுக்கள் நிலவிக்கொண்டு தான் வருகிறது. அதே போல இதுவரை பிக் பாஸ் வீட்டில் ஆண்களை போல சில பெண் போட்டியாளர்கள் கூட புகைபிடித்து இருந்தார்கள் என்ற சர்ச்சை கூட கிளம்பியது. ஆனால், இந்த சீசனில் போட்டியாளர்கள் செல் போனை பயன்படுத்துவதாக ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ளார்கள்.

- Advertisement -

இந்த வாரம் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் பலர் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு வீடியோ ஒன்றை போட்டுக்காண்பித்து இருந்தார். அந்த வீடியோவில் ரியோ, செல் போனை பயன்படுத்தியுள்ளார் என்று சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் சில ஆதாரங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ அது செல் போன் இல்லை மைக் பேட்டரி என்று கூறி வருகின்றனர்.

இந்த சீசனில் இவ்வாறாக சர்ச்சை எழுதுவது புதிதான விஷயம் அல்ல. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சோம் சேகர் செல்போனை பயன்படுத்தி இருந்தார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அன்றைய நிகழ்ச்சியில் அனிதா மற்றும் ஆரிக்கு இடையே நடந்த பிரச்சனை குறித்து நடிகர் கமலஹாசன் கேட்டுக் கொண்டிருந்தார்.இந்த பிரச்சனையில் தன் பக்க வாதத்தை அனிதா பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு நொடி கேமரா சோம் பக்கம் திரும்பியிருந்தது அப்போது சோம் சேகர் தலையை குனிந்தபடி தனது தொடைக்கு அருகில் ஏதோ நோண்டி கொண்டு இருந்தார் (இந்த நிகழ்வை நேற்றய நிகழ்ச்சியில் 41 நிமிடத்தில் பார்க்கலாம் ). இதைத்தான் நெட்டிசன்கள் பலரும் சோம் சேகர் செல்போனை நோண்டிக் கொண்டிருந்ததாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர்.

-விளம்பரம்-
Advertisement