கமலை போல தனது பெயரில் புதிய ஆடை பிராண்ட்டை ஆரம்பித்த பிக் பாஸ் 3 நடிகை. யார் தெரியுமா ?

0
985
Abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது.கடந்த மூன்று சீசன்களை போல இந்த சீசனிலும் கமல் தான் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்த சீசனில் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வந்தார். அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருந்தார். மேலும், நெசவுத் தொழிலாளகர்கள் நலம் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயனப்டுத்த போவதாக கூறி இருந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் இறுதி போட்டியின் போது நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாக அறிவித்தார்.

-விளம்பரம்-

அதே போல போட்டியாளர்களுக்கு கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார். இப்படி ஒரு நிலையில் கமல் போலவே பிக் பாஸ் 3 நடிகை அபிராமியும் தன்னுடைய பெயரில் புதிய ஆடை பிராண்ட்டை ஆரம்பித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த மூன்று சீசன்களை விட கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரண மூன்றாவது சீசன் மாஸ்காட்டியது . பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் அபிராமியும் ஒருவர்.

இதையும் பாருங்க : கிளைமாக்ஸ்ஸில் முறைத்துக்கொண்ட பின் கட்டி தழுவியா JD மற்றும் பவானி – மாஸ்டர் படத்தின் மேக்கிங் வீடியோ இதோ.

- Advertisement -

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகை அபிராமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் கூட கமிட் ஆகி இருந்தார் அபிராமி. ஆனால், ஒரு படம் கூட இன்னும் வெளியாக வில்லை. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இவர் ‘அபிராமி’ என்ற தன்னுடைய பெயரில் புதிய ஆடை பிராண்டு ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அபிராமி. மேலும், “எனது முதல் பேபி ஸ்டெப். என் பெயரில் ஒரு ஆடை பிராண்ட் வேண்டும் என்று என் வாழ்க்கையில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை… உங்கள் ஆதரவை தாருங்கள். நிறைய அன்பும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement