லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் சில நாள் ஓட்ட திட்டமிட்டுஇருந்தனர்.
இதையும் பாருங்க : விஜய்யுடன் நடிக்க 3.5 கோடி சம்பளம் – தளபதி 65 வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகை இவர் தான்.
இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியது.ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. இருப்பினும் மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர்.
அதே போல ஒரு சில திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் 50 நாட்களை கடந்து இருக்கிறது. மாஸ்டர் படம் வெளியாகி 50 நாள் ஆன நிலையில் இந்த படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் – விஜய் சேதுபதி நேருக்கு நேர் சந்திக்கும் கட்சியின் போது டேக் முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து உள்ளனர.