பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுபிக்ஷா. இவர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். சோசியல் மீடியாவின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதிலும் சோசியல் மீடியாவில் இவர் பதிவிட்டு இருக்கும் ரில்ஸ் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

அதன் மூலம் தான் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து சுபிக்ஷா திறமையாகவும் தன்னுடைய விடாமுயற்சியாலும் சிறப்பாக விளையாடி வந்திருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் 90 நாட்களுக்கு மேல் விளையாடியிருந்தார். அதோடு டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் சுபிக்ஷா சிறப்பாக விளையாடியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றிருந்தது.
சுபிக்ஷா குறித்த தகவல்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் டைட்டில் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் இவர் மக்கள் மனதை வென்று விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதோடு இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகிறது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுபிக்ஷா படத்தில் கமிட்டாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுபிக்ஷா நடிக்கும் படம்:
அதாவது, உறியடி, உறியடி 2 போன்ற படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் விஜயகுமார். இவர் பைட் கிளப், எலக்சன் போன்ற படங்களில் எல்லாம் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இவர் அறிவு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சத்ய சிவா நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை மூவிட்ரோன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
View this post on Instagram
படம் பற்றிய தகவல்:
இந்த படத்தினுடைய முதல் பார்வை போஸ்டரை நடிகர் சூர்யா- ஜோதிகா தான் வெளியிட்டு இருந்தார்கள். மேலும், சுபிக்ஷா அவர்கள் அறிவு என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதான் இவருடைய முதல் படம். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.






