கணவருக்காக மதம் மாறிய பாத்திமா பாபு. இதோ அவரது கணவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

0
8212
Fathima-Babu
- Advertisement -

தென்னிந்திய சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் நடிகை என்பதை விட பிரபலமான செய்தி வாசிப்பாளர் என்று சொல்லலாம். இவரை அதிகம் செய்தி வாசிப்பாளராக தான் மக்களுக்கு தெரியும். இவர் 1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-

பின் தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அதன் பின்னர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

இதையும் பாருங்க : கர்லிங் முடியில் புதிய கெட்டப்பில் புதிய முல்லை – கோலத்தை பார்த்து கேலி செய்யும் ரசிகர்கள். (ஏன் இப்படி ஆகிட்டாங்க)

- Advertisement -

பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் பாத்திமா, பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இந்து மதத்தை கடைபிடித்து வருகிறார் பாத்திமா. மேலும், பாத்திமா பாபுவிற்கு இரண்டு மகன்கள் கூட இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் பாத்திமா பாபு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது பாத்திமா பாபு, விஜய் தொலைக்காட்சியில் விரைவில் துவங்க இருக்கும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஜோடியாக மோகன் வைத்யா நடனமாட இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சென்றாயன், ஷாரிக், ஜூலி, ஷிவானி, கேப்ரில்லா, அனிதா சமப்த், ஜித்தன் ரமேஷ், சோம் சேகர், நிஷா, பாலாஜி என்று பலர் நடனமாடுகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement