தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் மலையாள மொழியில் ஒளிபரப்பான கருத்தமுத்து என்ற தொடரின் தழுவல் ஆகும். இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரோஷினி நடிக்கிறார்.
இதையும் பாருங்க : கொரோனாவால் பாதிக்கப்பட்ட என் அம்மா,அப்பாவ காப்பாத்துங்க – உதவி கேட்ட கோமாளி பட நடிகை
இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை காவ்யா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார். அதே போல சித்ரா இறந்த பின்னர் இவருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் கர்லிங் முடியுடன், வித்யாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இது கேவலமான லுக் என்று கலாய்த்து வருகின்றனர்.