தனது 13 வயதில் பாவாடை தாவணியில் இருக்கும் இளமையான புகைப்படத்தை பதிவிட்ட பாத்திமா.

0
7652
fathima
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ நடிகர் நடிகைகளுக்கு ஒரு ரீ-என்ட்ரியாக அமைந்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தவர் நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு. தென்னிந்திய சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் நடிகை என்பதை விட பிரபலமான செய்தி வாசிப்பாளர் என்று சொல்லலாம். இவரை அதிகம் செய்தி வாசிப்பாளராக தான் மக்களுக்கு தெரியும்.

-விளம்பரம்-

இவர் 1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.பின் தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.

- Advertisement -

இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அதன் பின்னர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார்.

கடந்த சில நாட்களாக நடிகை பாத்திமா பாபு அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா சனம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் பாத்திமா பாபு தனது சில த்ரோ பேக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது 13 வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement