குத்து சண்டை க்ளோவ்சை மாட்டிக்கொண்டு அடுத்த டாஸ்க்கிற்கு தயாராகும் போட்டியாளர்கள்.!

0
1683
Bigg-Boss

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய செய்திதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பிக்பாஸ் அறிவித்திருந்த 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை எடுத்துக்கொண்டு கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.கவின் வெறியேறியது சக போட்டியாளர்களும் அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் அவர்களின் பேச்சைக் கேட்காத கவின், நான் இந்த முடிவை தெளிவாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார். கவின் வெளியேறியதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இன்று வெளியான முதல் பேரோமோவில் கவினை நினைத்து மனம் நொந்து அழுதார் லாஸ்லியா. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் குறித்து கவினின் உயிர் நண்பரான சாண்டி மனமுருகி பேசியுள்ளது அனைவரயும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இன்று வெளியான மூன்றாவது ப்ரோமவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா அறையும் குறையுமான ஆடையில் உள்ளே சென்றுள்ளார்.

இதுவரை மஹத், யாஷிகா ,ஜனனி, ரித்விகா, ஹரிஷ் கல்யாண் , ஐஸ்வர்யா தத்தா என்று பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்னும் ஜூலி, காயத்ரி, மும்தாஜ், வைஷ்ணவி ஆகியோர் மாட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விசிட் அடிக்காமல் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement