போட்டியாளர்களுக்கு கால் செய்யும் குருக்கள்.! சாண்டி மற்றும் சேரனுக்கு போன் செய்தது யார் தெரியுமா?

0
10634
cheran-sandy

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 63நாளை நிறைவு செய்துவிட்டது. இத்தனை நாள் கடந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்துள்ளனர். 

kavin-mugen

மேலும், இன்னும் இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாக்கில் சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட சேரன், சாண்டி, லாஸ்லியா மூவரில் நேற்று சீட்டுக் குலுக்கிப் போட்டு சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

- Advertisement -

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கவின் மற்றும் முகென் இருவருக்கும் பிரூட்டி காலர் ஆப் தி வீக் மூலம் யாரோ போன் செய்துள்ளனர். அந்த அழைப்பை கேட்ட கவின் மற்றும் முகென் கண் கலங்கி அழுதுள்ளனர். ஒருவேளை அது அவர்களது ஆசிரியராக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான அப்டெட் வெளியாகியுள்ளது. இன்று போட்டியாளர்கள் அனைவர்க்கும் அவரவர் குருநாதர்கள் போன் செய்துள்ளனர். அந்த வகையில் சேரனுக்கு பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும் சாண்டிக்கு நடன இயக்குனர் கலா மாஸ்டரும் போன் செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement