ஆரி, சொன்ன போது தவறை ஒப்புக்கொள்ளாத போட்டியாளர் – குறும்படம் போட்டு காண்பித்த நெட்டிசன்கள்.

0
1888
gabe
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மணிக் கூண்டு டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் குழுவிற்கு 3 நபர்களாக பிரிந்து 5 குழுக்களாக விளையாடினார்கள். இதில் சனம் செட்டி, நிஷா, அனிதா ஆகிய மூவர் ஒரு குழுவாகவும் ரியோ கேப்ரில்லா ஆரி ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும். அர்ச்சனா, சம்யுக்தா, சோம் சேகர் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும் ஷிவானி அஜித் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும்.தொடர்ந்து 45 மணி நேரம் இரவு பகல், காத்து மழை என்று பாராமல் இந்த டாஸ்கில் பாலாஜியை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கை சீரியஸாக மேற்கொண்டனர்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கில் கடிகாரமாக செயல்படும் அணி 3 மணி நேரத்தை கணக்கிட்டு கூற வேண்டும் என்பது தான் விதி. இதில் ஒவ்வொரு அணியும் 3 முறை கடிகார டாஸ்கை செய்தனர். இந்த டாஸ்க் முடிவின் போது இந்த டாஸ்கை குறைவான நேரத்தில் செய்து முடித்த அர்ச்சனா, சோம், சம்யுக்தா ஆகிய மூன்று பேரும் இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆரி, ரியோ, கேப்ரில்லா ஆகிய 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இந்த 6 பேரும் அடுத்த வார தலைவர் பதவிக்கான டாஸ்கில் இடம் பெற்றனர்.

- Advertisement -

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பலகை மேல் நிற்க வைத்து பலகையை நீட்டி பிடித்து பின்னர் பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் ஒரு கோட்டியிலிருந்து இன்னொரு கோட்டிற்கு வரவேண்டும். இறுதிவரை அந்த பெட்டியை விழாமல் பிடித்திருப்பவர் வெற்றியாளர் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தார். இந்த போட்டியில் அர்ச்சனா மற்றும் சம்யுக்தா வெளியேறிவிட பின்னர் கேபி, ரியோ, ஆரி, சோம் ஆகியோர் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது கேபி, கட்டையை தனது உடலில் ஊன்றி நின்றதை பார்த்த ஆரி. அதனை சுட்டிக்காட்டினார். ஆனால், அதனை ஒப்புக்கொள்ளத கேபி, இல்ல ப்ரோ உங்களுக்கு அப்படி தெரியுதுன்னு சொன்னார். ஆனால், இந்த டாஸ்கின் பல இடத்தில் கேபி, இதை செய்து கொண்டு தான் இருந்தார். இருப்பினும் இறுதியில் ரியோ வென்று அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி ஒரு ஒரு நிலையில் கேப்ரில்லா ஏமாற்றினார் என்று நெட்டிசன்கள் குறும்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement