திடீரென்று நிறுத்தப்பட்ட ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகம் – ஹீரோயினாக கேபி, ஹீரோ யார் பாருங்க.

0
1323
gabe
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுவும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடரை பிரான்சிஸ் கதிரவன், ரிஷி மற்றும் ரவிப்ரியன் ஆகியோர் இயக்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-45.jpg

மலரின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து மலருக்கு உறுதுணையாக இருக்கும் வெற்றியின் கதை தான் ஈரமான ரோஜாவே. இந்த தொடர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் முடிந்தது. இந்த நிலையில் தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் சீசன்2 விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த தொடரில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்? பவித்ராவே நடிக்க போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதனிடையே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்திருக்கும் தென்றல் வந்து எண்ணை தொடும் என்ற சீரியலில் பவித்ரா நடித்துக் கொண்டிருக்கிறார்.

Thenmozhi BA Serial: லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு.. ரஜினி மாதிரி பேரு வைக்கலியா  ஹீரோ சார்? | more movie scenes copied in thenmozhi ba serial - Tamil  Filmibeat

இதனால் பவித்ராவுக்கு பதிலாக கதாநாயகியாக பிக்பாஸ் கேப்ரியலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தொடரில் கேப்ரில்லாவிற்கு ஜோடியாக சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சித்தார்த் இறுதியாக தேன்மொழி தொடரில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement