பிக்பாஸ் 2-வில் நுழையும் சீசன்-1 போட்டியாளர்..! அவர் மனைவி போட்டியாளர்கள் பற்றி இப்படி சொல்லிட்டாரே

0
961
Bigg-boss-season-1
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து சென்றுள்ளது, இன்னும் 10 பேர் மட்டும் மீதமுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல நடிகை விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டின் நுழைந்தார்.

-விளம்பரம்-

ganesh

- Advertisement -

ஆனால், விஜயலக்ஷ்மி வைல்ட் கார்டு மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக பல நடிகர் நடிகர்களின் பெயர்களும் வைல்ட் கார்டு என்ட்ரி லிஸ்டில் பேச்சுக்கள் அடிபட்டது, அதில் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான கணேஷ் வெங்கட் ராமனும் ஒருவர். எனவே, கணேஷ் வெங்கட் ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கணேஷ் வெங்கட் ராமனின் மனைவியும் சீரியல் நடிகையான நிஷாவிடம் பேசுகையில் கணேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நேர்ந்தால் நீங்கள் அவரை அனுமதிப்பீர்களாஎன்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது . அதற்கு பதிலளித்த நிஷா, நான் அனுமதிப்பேன், ஆனால் அவர்தான் செல்லமாட்டார். ஏனெனில் அவர் உள்ளே இருப்பவர்களைவிட மிகவும் அமைதியானவர். ஆனால், தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று கோவப்பட்டு விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கணேஷ் வெங்கட் ராமன், மிகவும் அமைதியாகவும், எந்த ஒரு நபருடனும் அளவிற்கு மீறி கோவபடாமலும் இருந்து வந்தார். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் சக போட்டியார்களிடம் மிகவும் அநாகரீகமாகவும், ஆபாச வார்த்தைகளும், கடுமையாகவும் நடந்துகொள்கின்றனர். அதனால் கணேஷ் வெங்கட் ராமன் சீசன் 2 விற்கு செல்ல மாட்டார் என்று நிஷா தெரிவித்துள்ளார்.

Advertisement