அட, பொல்லாதவன் படத்தின் இந்தி ரீ-மேக்கில் தமிழ் பிக் பாஸ் நடிகர். யார் தெரியுமா ? டீஸர் இதோ.

0
13599

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்களின் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் தான் பொல்லாதவன். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கியிருந்தார். மேலும், வெற்றிமாறன் முதன் முதலாக சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானது பொல்லாதவன் படத்தின் மூலம் தான். இந்த படத்தில் தான்வெற்றிமாறனும், நடிகர் தனுஷும் கூட்டணி சேர்ந்தது. அதற்கு பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியில் ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் என பல சூப்பர் ஹிட் படங்கள் வந்தது. இந்தப் படம் பை சைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷ், டேனியல் பாலாஜி, கிஷோர், ரம்யா, சந்தானம், கருணாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து உள்ளார்கள். தற்போது 12 ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற பெயரில் தனுஷின் பொல்லாதவன் படம் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சேகர் சூரி இயக்கி உள்ளார். தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் கரண் நாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நாதாலியா கவுர் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் அபிமன்யு சிங் நடிக்கிறார். இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி பெருநகரங்களில் ரிலீசாக உள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : பட்டதை வென்றும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் முகென் எதில் நடித்துள்ளார் பாருங்க.

இந்த படத்தில் நடிகரும், பிக்பாஸ் புகழ் முட்டை கணேஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழில் டேனியல் பாலாஜி நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் கணேஷ் ஹிந்தியில் நடித்திருக்கிறார். மற்றொரு வில்லனாக தான் நம்ம பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம் அவர்கள் தமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், இவன் வேற மாதிரி, தனி ஒருவன், தொடரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபலமானதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.

-விளம்பரம்-

இதுகுறித்து கணேஷிடம் பேசிய போது அவர் கூறியது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். ஆனால், எனக்கு இந்தியில் இது தான் முதல் படம். பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜி நடித்த கதாபாத்திரத்தில் தான் நான் நடித்து இருக்கிறேன். ஆனால், தமிழை விட இந்தியில் இந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement