தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதன் முறையாக தமிழக முதலமைச்சரானார் மு க ஸ்டாலின். பதிவேற்ற நாளில் இருந்து மக்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்ததோடு ஆட்சியை சிறப்பாக நடித்தி வருகிறார் ஸ்டாலின். இப்படி ஒரு நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி என்பவர் தன்னையும் தனது மகனையும் திமுக பிரமுகர்கள் மிரட்டுவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘மருது’ படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் அம்மாவாக நடித்தவர் நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி.
தமிழில் இவர் மூடர் கூடம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், கணிதன், மருது, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல பாடங்களில் இவர் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தன்னையும் தனது மகனையும் திமுக பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஆதிரா, நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை “இங்கு வந்தால் கொன்று விடுவேன்!” என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை. சந்தேகதிர்க்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்த சம்பவத்தின் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ஒரு பக்கம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் ஒரு சிலர் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களை மிரட்டி வருவது மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.