கமலுக்கே தெரியாமல் பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்.! இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் இது தான்.!

0
40893
kamal
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

கடந்த சில வாரங்களாகவே சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டுதான் இருக்கிறது இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இருக்கும் சுவாரஸ்யம் இந்த வாரம் இல்லை இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களுக்கு ஒரு சில கருத்துக்களையும் கேள்விகளையும் கொடுத்திருந்தார்.

- Advertisement -

இந்த டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக ஏற்கனவே வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் முகென் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இன்று நடைபெற உள்ள அடுத்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கில்முகென், வனிதா, சேரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த டாஸ்கில் வனிதா வெற்றி பெற்று இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் காமலுக்கே தெரியாமல் ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அது என்னவெனில் கமலுக்கு ஒரு குறும்படம் போட்டுக் காண்பித்துள்ளார். மேலும், இன்றும் எலிக்ஷன் பற்றிய பேச்சுகள் போட்டியாளர்கள் முன் பேசப்படுகிறது. பார்வையாளர் ஒருவரின் கேள்வி-பதிலும் நடக்கிறது. இது தான் இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருக்கும்.

-விளம்பரம்-

Advertisement