ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களை வெளுத்து வாங்கிய காயத்ரி..!

0
515

நடிகையும்,நடன இயக்குனருமான காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்தார். அதன் பின்னர் இவர் சமூக வலைத்தளத்திலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஆனால், சமீபத்தில் ஐயப்ப கோவில் விவகாரத்தில் நடிகை காயத்ரி ஆதரவாக பேசியுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.கடந்த சில சில மாதங்களாக கேரளா ஐயப்பன் கோவில் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு பெண்களும் சபரி மலைக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், அணைத்து வயது பெண்களையும் சபரி மலைக்கு வர ஐயப்ப பக்தர்ககள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை காயத்ரி, சபரி மலைக்கு செல்லும் பெண்களை வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பதியிட்டுள்ளது என்னவெனில், ஐயப்பனின் ஐதீகம் தெரியாத பெண்கள் எதற்காக ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்கின்றனர்.சில அரசியல் காரணத்திற்காக இப்படி அடாவடி செய்கிறீர்களா. உங்களுக்கு ஐயப்பன் கோவிலுக்கு போக வேண்டும் என்றால் 40 வயதிற்கு மேல் போங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement