மஹத் மற்றும் யாஷிகாவின் புகைப்படத்தை பதிவிட்ட விஜய் டிவி..!கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

0
1292
mahathyashika
- Advertisement -

தமிழில் பல்வேறு தொலைக்காட்சிகள் இருந்தலும் அதில் ஒரு சில தொலைக்காட்சி மட்டுமே மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறது. அதில் விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பிரபலமடைந்துள்ளது.

இதையும் படியுங்க : விஜய் டிவி பதிவிட்ட மானஸா மற்றும் சஞ்சீவின் ‘டிக் டாக்’ வீடியோ..!வறுத்தெடுத்த வலைதள வாசிகள்..

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிவின் செல்ல பிள்ளையாக மாறிவிட்டனர் மஹத் மற்றும் யாஷிகா. தற்போது ஜோடி நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது என்ன தகுதி இருக்கிறது என்று ஏற்கனவே பலரும் கடுப்பில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவி சமீபத்தில் மஹத் மற்றும் யாஷிகா ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. இதனை கண்ட இன்ஸ்டாகிராம் வாசிகள் விஜய் டிவி மாமா டிவி என்றும் ஜோடி இல்லாதவர்கள் விஜய் டீவ்க்கு சென்றால் கல்யாணம் ஆகிடும் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதற்கு முக்கிய காரணமே விஜய் டிவியில் இருந்த செந்தில், கலக்கப்போவது யாரு நவீன், மானஸா ஆகிய அனைவருமே விஜய் டீவிக்கு வந்த பின்னர் காதல் கல்யாணம் என்று துவங்கி விட்டனர் இதனை குறிப்பிட்டே தற்போது மஹத் மற்றும் யாஷிகாவையும் கலாய்த்து வருகின்றனர். அது போக இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடித்த கூத்தும் நாம் அனைவரும் அறிவோம்.

Advertisement