பிக்பாஸ் கவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பிரச்சனையின் போது பேசுகையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் திருச்சியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தோம் அப்போது எங்களுக்கு நண்பர்கள் தான் உதவி செய்தார்கள்.
உறவினர்கள் யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை எனக்கென்று சில கடன்கள் உள்ளது. அதை அடக்கத்தான் நான் பிக்பாஸ் சிகிச்சைக்கு வந்தேன் இன்னும் ஒரு சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி விட்டால் அந்த கடனை அடைப்பதற்கான பணத்தை சம்பாதித்து விடுவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் கவின் இன் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது.
இதையும் பாருங்க : நான் தான் மிகவும் பிரபலம்.! தனுக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்ட வனிதா.! லாஸ்லியாவுக்கு என்ன இடம் கொடுத்தார் ?
கவின் தனது தாயார் செய்த மோசடிகாக பணத்தை சம்பாதிக்கத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் எனவும் கவினின் ஹேட்டர்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கவின் தாயார் கைது செய்யப்பட்டதால் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று நள்ளிரவு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கவின், குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இது போன்ற செய்திகளை பதிவிட்டு ஒருவரின் எதிர்காலத்தை பாடாக வேண்டாம் கவின் வாழ்க்கையில் முன்னேற நினைத்து கடுமையாக போராடி வரும் ஒரு திறமையான நபர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடாக மட்டும் இல்லாமல் இங்கே பிறந்து வளர்ந்தவர் களையும் வாழ விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்