தியேட்டர் வாசலில் ஒரு உருட்டு ட்விட்டரில் ஒரு உருட்டு – நெஞ்சுக்கு நீதி படம் குறித்து காயத்ரி ரகுராமின் இரட்டை வேஷம்.

0
346
gayathri
- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.இது இந்தியில் வெளிவந்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் படம் என்றாலும் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். இருப்பினும் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is uthanithu2-1024x576.jpg

சமீபத்தில் இந்த படத்தை பல்வேரு பிரபலங்கள் பார்த்து இருந்தனர். அந்த வகையில் காயத்ரி ரகுராமும் இந்த படத்தை பார்த்தார். அப்போது தியேட்டர் வாசலில் இந்த படம் குறித்து அவர் பேசிய போது ‘ஆயுஷ்மான் குரானா நடிச்ச ஆர்ட்டிக்கள் 15 படம் எனக்கு ரொம்பவே பிடிச்ச படம், அந்த படம் எப்படி தமிழில் வந்திருக்கு என்பதை பார்க்கவே வந்தேன். உதயநிதி ஸ்டாலின் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்காரு, நாங்க ரெண்டு பேரும் வேற வேற கட்சியா இருக்கலாம். ஆனால், சினிமா கலைஞரா நான் அவரை பாராட்டுறேன்.

இதையும் பாருங்க : நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறிய சாயா சிங் – இந்த தேதியோடு அவர் நடித்த கடைசி கடைசி எபிசோட்.

- Advertisement -

ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி :

எல்லோருக்கும் சமநீதி வேணும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடும் என்று கூறினார். இறுதியில் அனைவரும் மத பாகுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சொல்லாமல், சாதி பாகுபாடுகளை பார்க்காமல் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். ஆனால், இந்த படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது ”நெஞ்சுக்கு நீதி படம் பார்த்தேன் இந்த படம் இந்தி ரீமேக் Article 15 ஆக நன்றாக இருந்தது, ஆனால் இளம் பெண்ணின் பலாத்காரத்தின் வலியை விட சாதி ஆதிக்கம் செலுத்தியது.

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு :

கற்பழிப்பு தான் உண்மையான வலி. சாதி ஒடுக்கப்படுவதை விட பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாம் ஏன் அதை உணரவில்லை.எங்கோ நான் இந்த படத்தில் பெண்களின் வலி என்னால் உணர முடியவில்லை.எதிர்பார்த்தபடி தேவையற்ற 1 அல்லது 2 திணிக்கப்பட்ட சில திராவிட மாடல் உரையாடல்கள் காரணமாக இருக்கலாம்.நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு, பிராமண சகோதர சகோதரிகளின் அவதூறுகளுக்கு எதிராக அனைத்து இந்துக்களும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. அனைத்து சாதி இந்து ஒற்றுமைக்காக பிராமணர்களுக்கு மட்டுமின்றி இந்து ஒற்றுமையை காட்டுங்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-501.jpg

சாதியை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது :

இன்று எந்த பிராமணர்களோ எந்த ஜாதியினரோ எந்த அட்டவணை ஜாதியினரையும் தவறாகப் பேசுவதில்லை. இந்த படம் சாதியை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இன்று பிசிஆர் சட்டம் யார் வேண்டுமானாலும் தண்டிக்கப்படும் அளவுக்கு வலுவாக உள்ளது.ஆர்டிகல் 15 திரைப்படம் பாஜக அரசால் வரவேற்கப்பட்டது மற்றும் சமத்துவம் ஒற்றுமைக்காக பாஜக அரசால் கொண்டாடப்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is 1-502.jpg

ஸ்டிக்கர் ஒட்டி திராவிடமயமாக்குகிறது

ஆனால், திமுக உண்மைக்கு கடுமையான மாறான வசனங்களுடன் திரைப்படத்தை ஸ்டிக்கர் ஒட்டி திராவிடமயமாக்குகிறது. இது நெஞ்சுக்கு நீதி.பலாத்காரத்தில் சாதி இல்லை அது ஒரு மனிதனின் கொடூரமான மனம். கற்பழிப்புக்கு காரணம் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மட்டும் அல்ல. கற்பழிப்புக்கு வயது இல்லை.. சிலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். துரதிருஷ்டவசமாக பலர் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement