கும்பல் கொலையும், இனப்படுகொலையும் ஒன்னா, வன்முறைக்கு அளவுகள் இருக்கிறது – சாய் பல்லவியின் விளக்க வீடியோவை கண்டு பொங்கிய காயத்ரி ரகுராம்.

0
416
saipallavi
- Advertisement -

காஷ்மீர் படுகொலையையும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலையும் உப்பிட்டு பேசிய கருத்தால் சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி, தனது பேச்சு குறித்து விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், ‘நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா? அல்லது இடதுசாரி ஆதரவாளரா?’ என என்னிடம் கேள்வி எழுப்பப்ப்பட்டது.அதற்கு நான் நடுநிலையானவர் என்று கூறினேன். முதலில் நாம் மனிதநேயமிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் நமது அடையாளங்கள் எல்லாம் என கூறினேன். எதுவாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள் முதலில் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறி இரண்டு உதாரணங்களைச் சொன்னேன்.

-விளம்பரம்-

எந்த வகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அது தவறுதான். எந்த மதத்தின் பெயரில் அது நிகழ்ந்தாலும் அது பெரிய குற்றம்தான். இதுதான் நான் சொல்ல வந்த கருத்தின் சாரம்சம். நிறையபேர் சமூக வலைதளங்களில் கும்பல் வன்முறைகள் குறித்து நியாயம் கற்பித்து வருகிறார்கள். ஒருவரை கொல்வதற்கு மற்றவருக்கு எந்தவித உரிமையுமில்லை. மருத்துவம் பயின்றவர் என்ற முறையில் அனைவரின் உயிரும் முக்கியமானது; அனைவரின் உயிரும் சமமாக கருதப்பட வேண்டியது.

இதையும் பாருங்க : சீரியல் வரலாற்றிலேயே முதன் முறையாக நடிகர்களுக்கே சொல்லாமல் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துள்ள பூவே உனக்காக சீரியல் – என்ன பிரச்சனை ?

- Advertisement -

சாய் பல்லவி விளக்கம் :

என்னுடைய 14 வருட பள்ளி காலத்தில் ஒவ்வொரு நாள் பள்ளிக்குச் செல்லும்போது, இந்நாட்டின் அனைத்து குடிமக்களும் எனது அண்ணன், தங்கைகள், நான் என் நாட்டை நேசிக்கிறேன். இந்தியராக பெருமை கொள்கிறேன் என உறுதிமொழியேற்பேன். இது அனைத்தும் எனக்குள் ஆழமாக பதிந்திருக்கிறது. நான் ஒரு நடுநிலையானவள், தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவள். முதன்முறையாக உங்களிடம் இப்படிப் பேசுகிறேன். நான் சொன்னதை எப்படி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

எனக்காக குரல் உயர்த்திய உள்ளங்களுக்கு நன்றி

நேர்காணலில் நான் கூறியது சரியாக சித்தரிக்கப்படவில்லை. முக்கியமான பிரபலங்களும், இணையதளங்களும் முழுமையான என் நேர்காணலை பார்க்காமல் கருத்து கூறியது வேதனையளிக்கிறது. எனக்காக நின்ற உள்ளங்களுக்கு நன்றி. எனக்காக குரல் உயர்த்திய உள்ளங்களுக்கு நன்றி. நான் தனியாக இல்லை என உணர வைத்தவ உங்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.

-விளம்பரம்-

காயத்ரி ரகுராம் ட்வீட் :

இப்படி ஒரு நிலையில் சாய் பல்லவியின் இந்த வீடியோவை விமர்சித்து உள்ள பா ஜ கவை சேர்ந்த காயத்ரி ரகுராம் ‘கும்பல் படுகொலையை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டத்தை நியாயப்படுத்துவது வினோதமாக இருக்கிறது. சிக்கலில் சிக்குவதற்கும் சிக்கலை உருவாக்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொண்டால், அது உங்களின் விளக்கத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும்.

ஒப்பீடுகள் பொது வெளியில் பகிரப்படக்கூடாது :

காஷ்மீரில் சிறிய அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது கும்பல் கொலை அல்ல. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுவது கும்பல் கொலை அல்ல. எந்த விதமான வன்முறையும் தவறானது ஆனால் வெவ்வேறு அளவு அல்லது வன்முறை அளவு உள்ளது, அதை ஒப்பிட முடியாது. காஷ்மீர் இனப்படுகொலைக்கான பொன்னான வார்த்தைகளை நீங்கள் சொல்ல வேண்டியிருக்கலாம்.

உணர்ச்சிகரமான கருத்துக்கள் அல்லது ஒப்பீடுகள் பொது வெளியில் பகிரப்படக்கூடாது. உங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்கள் பார்வைகள் மற்றவர்களை பாதிக்கவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது (குறிப்பாக நீங்கள் ஒப்பிட்ட சம்பவத்தால் ஆழமாக பாதிக்கப்பட்டவர்கள்). மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். 
Advertisement