பிக் பாஸ் காயத்ரி ரகுராம் என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பயங்கரமாக பிரபலமாகி விட்டார். மேலும்,காயத்ரி ரகுராம் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் நடன கலைஞராக பணிபுரிகிறார். இவர் நடன கலைஞர் மட்டுமல்ல திரைப்பட நடிகையும் ஆவார். மேலும்,காயத்ரி ரகுராம் அவர்கள் சினிமா துறையில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் ஆவார். இதனைத்தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் 2002 ஆம் ஆண்டு 'சார்லி சாப்ளின்' திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பின்னர் அவர் 2008 ஆம் ஆண்டில் இருந்து பல திரைப் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தார் உள்ளார்.
https://twitter.com/gayathriraguram/status/1196285018554789888
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அதற்கு பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் அவருக்கு சரியாக அமையவில்லை இருந்தாலும் அவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதற்கு பின்னர் தான் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் 'திருமாவளவனை' பற்றி தாறு மாறாக பல கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். மேலும், இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் காயத்ரி ரகுராம் குறிப்பிட்ட பதிவுகளுக்கு பல எதிர் விமர்சனங்கள் தருகின்றனர் நெட்டிசன்கள். இதனால்,காயத்ரி ரகுராம் அவர்கள் உடனே அந்த பதிவை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்களா. தர்ஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சனம் ஷெட்டி.
மேலும், காயத்ரி ரகுராம் அவர்கள் இது குறித்து கூறியது,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் என் மேனஜரின் போன் நம்பரை வாங்கி அவருடைய தொண்டர்களிடம் கொடுத்து உள்ளார். மேலும், திருமால்வளவன் தொண்டர்கள் எனக்கு தொடர்ந்து போன் செய்து கேவலமாக பேசி வருகிறார்கள். அதிலும் ஒரு சில பேர் அசிங்கமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அவர் இப்போது தன் தொண்டர்களை ஏவி விட்டு உள்ளார் என்று கூறினார். இதனால் தான் காயத்ரி ரகுராம் தாறுமாறாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமால்வளவனை பேசியதாக கூறப்படுகிறது.
https://twitter.com/gayathriraguram/status/1196299148795895810
https://twitter.com/gayathriraguram/status/1196140355210510336
https://twitter.com/gayathriraguram/status/1196129411285671936
https://twitter.com/gayathriraguram/status/1196381628047577089
இந்நிலையில் காயத்ரி ரகுராம் கருத்துக்கு பயங்கரமான எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் கட்சி தொண்டர்கள்.அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் காயத்ரி ரகுராம் குறித்து பல விமர்சனங்களை செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதனைத்தொடர்ந்து காயத்ரி ரகுராமை கண்டிக்கும் விதமாக சென்னை மகாலிங்கபுரத்தில் இருக்கும் காயத்ரி ரகுராமன் வீட்டின் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிலிருந்து ஒரு சில பேர் வீட்டிற்குள் நுழையவும் முயற்சி செய்தனர். இதனால் அந்த இடத்தில் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காவல்துறையினர் அவர்களை கலைத்து விட்டு அமைதி படுத்தினர். மேலும், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்றும் நான் இப்போது வீட்டிலேயே இல்லை என்றும், நான் மெரினாவில் வருகிற 27 ஆம் தேதி பிரஸ் மீட் வைப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார் காயத்ரி.




