நடிகை காயத்ரி ரகுராம் பாண்டவர் அணி குறித்தும், நடிகர் கார்த்தி குறித்தும் விமர்சித்து பதிவிட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் உள்ள நடிகர்களுக்கு என்று ஒரு தனி சங்கம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் தான் நடிகர் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். பின் 2015 ஆம் ஆண்டு தான் தேர்தல் தொடங்கியது. அதோடு நடிகர் சங்கத்திற்கு என பல ஆண்டு காலமாகவே கட்டிடம் கட்டும் திட்டம் இருந்து கொண்டிருக்கின்றது.
இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் பாண்டவர் அணி உருவாக்கினார். 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கினார். இதில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றனர்.
மீண்டும் வெற்றி பெற்ற விஷால் அணி :
வெற்றி பெற்றுள்ள இந்த அணியை சேர்ந்த பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் 100 க்கும் அதிகமான ஓட்டுகள் கூடுதலாக உள்ளதாகவும், ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடப்பதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார் பாக்யராஜ்.
நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி :
மேலும், தேர்தல் முடிவு வந்த பிறகு நடிகர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியது, வாக்காளர்களுக்கு நன்றி. நடிகர் சங்கத்துக்கு கட்டப்படும் கட்டிடத்தை கட்டி முடிப்போம் என்று உறுதியளித்திருக்கிறேன். இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினை தனது அணியினருடன் சந்திக்க இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். இதற்கிடையில் 870 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக போட்டியிட்ட காயத்ரி ரகுராம் தோல்வி அடைந்துள்ளார்.
படங்களுக்கு வரும் அரசியல் எதிர்ப்புகள் :
பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கார்த்தி ‘தணிக்கை குழு சான்று பெற்ற திரைப்படங்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் வரும் தொடர் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க உதவுவோம். நடிகர் சங்கம் கண்டிப்பாக துணை நிற்கும் என்று கூறியுள்ளார். கார்த்தியின் இந்த கருத்தை பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம் ‘குறிப்பிட்ட மக்கள் மீதும் கோயில்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் நீங்கள் வெறுப்பைக் காட்டினால் என்ன செய்வது? அவர்கள் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் மற்றும் படங்களின் புறக்கணிப்பு.
கார்த்தி குறித்து காயத்ரி கூறியது:
அது அவர்களின் ஜனநாயகம். நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்திற்கு பல அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்புகள் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகர் சங்க கட்டிடம் நடிகர் சங்க தேர்தல் உடன் இணைக்கப்படவில்லை. போலி வாக்குக்கு பணம் செலவழிக்காமல் கட்டிடம் கட்டி இருக்கலாம். மேலும், கல்யாண மண்டபத்திற்கு தனது தந்தை நடிகர் சிவகுமாரின் பெயரை வைக்க வேண்டும் என்பது தான் கார்த்திக்கின் எண்ணம். நடிகர் சங்கத்தை அகரம் அறக்கட்டளை ஆக மாற்ற திட்டமிட்டுள்ளனர் என்று காயத்ரி ரகுராம், கார்த்தியை தாக்கி பயங்கரமாக விமர்சித்து பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்.