‘பாலியல் குற்றவாளி அண்ணாமலையே, பா ஜ கவை விட்டு ஓடிப் போ’ ட்விட்டரில் பதிவிட்டு பா ஜ கவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்.

0
465
gayathri
- Advertisement -

சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காயத்ரி ரகுமான், தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாலியல் குற்றவாளி என்று குறிப்பிட்டதோடு தானும் பாஜகவில் இருந்து விலகி விட்டதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார். பாஜகவில் தொடர்ந்து பணிபுரிந்து வந்த காயத்ரி ரகுராம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பிறகு காசி சங்கம் தொடங்கி தற்போது வரையில் பாஜக விற்கு மேலாக பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் `துபாய் ஹோட்டலில் என்னை 150 பேருக்கு மத்தியில் அசிங்கப்படுத்தியதற்கு பாஜக தலைவர் விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தார் காயத்ரி ரகுராம். மேலும், அண்ணாமலை குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காயத்ரி ரகுராம் ”அண்ணாமலை ஒரு வார் ரூம் நடத்தி வருகிறார். அங்கு நான் பிக் பாஸில் இருக்கும்போது என்னயுடைய குணத்தை விமர்சிப்பது.

- Advertisement -

நான் திமுகவின் கைக்கூலியாக ஸ்லீப்பர் செல் என்று கூறுவதுமாக இருந்து வருகிறது. மேலும் பெண்களை குறித்து அவதூறாகவும், கிசுகிசு பேசுவதற்கும் அந்த ரூம் செயல்படுகிறது. ஆனால் பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா தன்னுடைய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டார் அதுவும் பாஜக அலுவலகத்திலேயே. ஆனால் நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏன் என்னை கிண்டல் செய்கிறீர்கள் என்பதற்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்தால் போதும்.

இது பாஜக கட்சியின் பிரச்சனை இல்லை தலைவரான அண்ணாமலை என் மீது வைக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல். அண்ணாமலை தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளார் எனவே அவர் பொய் சொல்லகூடாது . எனவே துபாய் ஓட்டலில் என்னை அப்போது 150 பேருக்கு மத்தியில் அவதூறாக பேசியதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையெனில் என் மீதான குற்றசாட்டை மறுக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் பெண்ணின் நேர்மை எனக்கு அரசியலை விட பெரியது. அண்ணாமலை என்னுடைய விஷியத்தில் அமைதியாக இருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் தவறு செய்யவில்லை அப்படி தவறு செய்திருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். எனவே நீதி மற்றும் உண்மை வெளியில் வரும் வரை நான் தொடந்து போராட போகிறேன் என்று கூறியிருந்தார். மேலும் பைக் ரேசரான அலிஷா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் எனக்கு ஏன்? கொடுக்கவில்லை.எல்லா பெண்களையும் ஒன்றாக பாருங்கள் அந்த பதிவில் கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் கட்சியில் இருந்து தான் விலகுவதாகவும் டிவிட்டரில் அறிவித்துள்ளார். சமீபத்தில் யூடுயூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கும் காயத்ரி அந்த பேட்டியில் அண்ணாமலை குறித்து கடுமையாக விமரித்து இருக்கிறார். மேலும், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நேர்காணலுக்கு நன்றி திருமதி நர்மதா. நியாயமான கேள்விகளையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளீர்கள். ஒரு பெண்ணாக ஆதரவு அளித்ததற்கு நன்றி.பாலியல் குற்றவாளி அண்ணாமலையே, பா ஜ கவை விட்டு ஓடிப் போ’ என்று பதிவிடுள்ளார்.

Advertisement