சூர்யா மீது நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்திரி தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். இடையில் இவர் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இறுதியாக, இவர் தமிழில் வெளியான யாதுமாகி நின்றார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், பல ஆண்டுகளாக bjpயில் காயத்ரி இருக்கிறார். சமீப காலமாக காயத்ரி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் அந்த கட்சியின் கலை, கலாச்சார பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சூர்யா மீது காயத்ரி எச்சரிக்கை விடுத்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இதையும் பாருங்க : அம்மாவிற்கு புற்று நோய், விரைவில் விவாகரத்து, பல வருடங்கள் கழித்து கிடைத்த சீரியல் வாய்ப்பு – பர்சனல் பகிர்ந்த காமெடி நடிகை.
காயத்திரி அளித்த பேட்டி:
அதாவது, சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு காயத்ரி பேட்டி அளித்தார். அதில் அவர், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் விஞ்ஞானியாக பல காலம் பணியாற்றியவர் நம்பி நாராயணன். அவரது தேச பக்தியில் சந்தேகம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின் நம்பி நாராயணன் சட்ட ரீதியில் போராடிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேசபக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ராக்கெட்ரி.
ராக்கெட்ரி படம்:
இதை மாதவன் நடித்து இயக்கி இருந்தார். படம் பல மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன் பேட்டி தரும் ஒரு காட்சி உண்டு. பேட்டி எடுப்பவர் உள்ளூர் மொழியில் பிரபலமான நடிகராக இருப்பவர். பேட்டி முடிந்ததும் நம்பி நாராயணன் ஜெய் ஹிந்த் என்று கூறி முடிப்பார். இந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக்கானும் ஜெய் ஹிந்த் என்று கூறுவார். தமிழ் மொழியில் நடிகர் சூர்யா பேட்டி எடுப்பவர். ஆனால், இவர் ஜெய்ஹிந்த் என்று கூறி முடிக்க மாட்டார்.
சூர்யா மீது கண்டனம் தெரிவித்த காயத்திரி:
இது என்ன முரண்பாடு என புரியவில்லை? சூர்யாவுக்கு ஜெய்ஹிந்த் பிடிக்கவில்லையா? அல்லது பட காட்சி அமைப்பே அப்படித்தான் எடுக்கப்பட்டுள்ளதா? சூர்யா, ஜெய்ஹிந்த் அதாவது இந்தியா வாழ்க என்ற வார்த்தையைக் கூற மாட்டார் என்றால் அது என்ன கொச்ச வார்த்தையா? ஒருவேளை அவருக்கு இந்தி தெரியாததால் அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ, மறுத்திருந்தாலோ ஹிந்தி மொழியை இலவசமாக கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். அப்படி இல்லாமல் அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்து இருந்தால் அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப்பற்று இல்லாதவர் இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடலாம்.
சர்ச்சையை கிளப்பிய காயத்திரி பேட்டி:
அதற்கு என்ன தேவையோ அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். இதற்கு சூர்யா சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இப்படி சூர்யா மீது காயத்ரி கூறியிருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதற்கு சூர்யா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.