BJP பற்றி பதிவிடுவதால் சித்தார்த்துக்கு இப்படி நடக்கிறதா ? நடிகரின் பிரச்சனைக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

0
3029
sid
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. தற்போது நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்தார். இது அவருடைய வழக்கமான ஒன்று.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்துவது அவசியமான ஒன்று என்றும் அவர் கூறுவார். கருப்பு பணம் விவகாரத்தில் இருந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வரை மத்திய மற்றும் மாநில அரசு என எந்தத் தரப்பையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தார். அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்தும் ட்வீட் செய்து இருந்தார் சித்தார்த்.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தினால் மீம் மெட்டீரியலாக மாறிய மாளவிகா – எப்படி எல்லாம் மீம் போட்டு கலாய்க்குறாங்க பாருங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்., நான் 5 முறை ஹேக் செய்யப்பட்டுள்ளேன். எனது ட்வீட்டுகள் தடைசெய்யப்பட்டு மறைக்கப்படுகின்றன. பின்தொடர்பவர்கள் எனது ட்வீட் எதையும் பார்க்க முடியாது என்று புகார் கூறுகிறார்கள், அவர்கள் தானாகவே பின்பற்றப்படவில்லை. எனது ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 மாதங்களில் மாறவில்லை. ஏதோ நிச்சயமாக முடக்கப்பட்டுள்ளது!. என்ன நடக்கிறது என்று ட்விட்டர் இந்தியா என்று பதிவிடுள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவை கண்ட பலரும், அவர் சொன்னது போல அவருடைய ட்வீட்கள் காண்பிக்கப்படுவது இல்லை என்று கமன்ட் செய்து வருகின்றனர். அதிலும் பலர் நடிகர் சித்தார்த், அடிக்கடி பிஜேபி குறித்தும் மோடி குறித்தும் ட்வீட் செய்து வருவதால் தான் இப்படி உங்கள் கணக்கு முடுக்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர். அவர்கள் அப்படி கூறுவதர்க்கு காரணமும் இருக்கின்றது.

-விளம்பரம்-

நடிகர் சித்தார்த் பிஜேபி குறித்தும் மோடி குறித்தும் பல முறை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அவ்வளவு ஏன் கடந்த ஆண்டு மோடியின் வாழக்கை வரலாற்று படத்தின் டீஸர் வெளியான போது அதனை விமர்சித்து கூட ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். மோடி படத்தின் ட்ரைலர், மோடி எப்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை ஒற்றை கைப்பிடியால் அழித்து இந்தியாவின் சுதந்திரத்தை வென்றது என்பது பற்றிகூறுவது போல இருக்கிறது. இன்னொரு மலிவான தந்திரம் போலவும் நாகரீகமான நக்சல் வேலை போன்று தான் தெரிகிறது என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை பற்றி கூறியுள்ள சித்தார்த், ஜெயலலிதா அடிப்படையிலான பல படங்களில் எவ்வளவு தங்க மூலம் பூசப்பட்டு வெளியாக போகிறதோ என்று தெரியவில்லை. வரலாறை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது குற்றமில்லை. வரலாறை பொய்யாக கூறினால்தான் குற்றம் என்றும் கூறி இருந்தார். இதனால் தான் பலரும் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கு சந்தித்து வரும் பிரச்சனைக்கு மோடி பெரையும் பிஜேபி பெயரையும் கூறி வருகின்றனர் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement