முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பி ஜே பி நடிகை பகிர்ந்த புகைப்படம் – குவியும் கமெண்டஸ் (அதுவும் யார் பாருங்க)

0
543
gayathri
- Advertisement -

தமிழகத்தில் சில தினங்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் வீட்டுக்குள்ளேயும் வெள்ள நீர் சென்றுள்ளது. மேலும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தத்தளித்து வருகின்றனர். கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் மீட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை அருகில் உள்ள முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவம் ஆகியவற்றையும் அரசாங்கம் வழங்கி வருகிறது. இதனிடையே சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அதிலும் வடசென்னை பகுதியில் உள்ள புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர் கொளத்தூர் வில்லிவாக்கம், போரூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு இருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும், உடை எல்லாம் வழங்கி வந்து வந்திருந்தார்.

இதையும் பாருங்க : இதுவரை 4 பேர் வெளியேறினாலும் நமீதாவை சந்தித்து உள்ள முதல் போட்டியாளர் – வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

மேலும், மழை நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளையும் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ளவர்கள் குறித்து விமர்சிப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் உடைய புகைப்படத்தை பகிர்ந்து ஸ்டாலின் குறித்து விமர்சித்து இருக்கிறார். அந்த புகைப்படத்தில் முதல்வர் அவர்கள் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபடியே வருகிறார். அப்போது அங்கிருக்கும் வீடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீட்டில் இருந்தபடியே முதல்வருக்கு வணக்கம் தெரிவித்து இருக்கிறார்கள். முதல்வரும் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடியே மழை நீரில் நடந்து செல்கிறார். இந்த நிலையில் இந்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு காயத்ரி ரகுராம் கூறி இருப்பது, ‘இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே’ என்று விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி காயத்திரி பதிவிட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருடைய பதிவுக்கு பலரும் தாறுமாறாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement