இதுவரை 4 பேர் வெளியேறினாலும் நமீதாவை சந்தித்து உள்ள முதல் போட்டியாளர் – வைரலாகும் புகைப்படம்.

0
409
namitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஒரு மாதத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த சீசனின் முதல் நாளிலேயே மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக நமீதா என்ற திருநங்கை ஒருவரும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டது அறிவிக்கப்பட்டார்.ஆனால், உண்மையில் அவர் ஏன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதற்காக காரணமே தெரியவில்லை.

-விளம்பரம்-

ஆனால், அவர் ஏன் வெளியேறினார் என்ற காரணம் இதுவரை தெரியாமல் தான் இருக்கிறது. நமீதா வெளியேறியதை தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு என்று பலர் வெளியேறினர். ஆனால், இதுவரை இவர்கள் யாரும் நமிதாவை சந்திக்கவே இல்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் வெளியேறிய சுருதி மற்றும் நமீதா இருவரும் சந்தித்து உள்ளனர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய அடுத்தே நாளே தன் பிறந்த நாளை கொண்டாடினர் சுருதி. இந்த கொண்டாட்டத்தில் நமீதாவும் பங்கேற்று இருக்கிறார்.

இதையும் பாருங்க : என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் – திடீர் திருமணம் குறித்து வீடியோ வெளியிட்ட செம்பருத்தி சீரியல் ஷபானா.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் நமிதா. அப்போது ரசிகர் ஒருவர், மீண்டும் நீங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்ட் போட்டியாளராக சொல்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த நமிதா ‘ போகலாம் போகாமலும் இருக்கலாம்’ என்று பதிலளித்து இருந்தார்.

அதே போல இந்த சீசனில் மிகவும் கடுமையான போட்டியாளர்கள் யார் என்று கேட்டதற்கு ‘நாடியா, அபி, சுருதி, பிரியங்கா, ராஜு’ என்று கூறியிருந்தார். அதேபோல சுருதி குறித்து சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ‘சுருதி அவருடைய விளையாட்டை தனியாகவும் மிகவும் தன்னம்பிக்கையோடும் விளையாடுகிறார். அவர் மிகவும் நேர்மையான போட்டியாளர்’ என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement