நண்பர்களே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன் – ஜிபி முத்து வெளியிட்ட முதல் வீடியோ.

0
387
gpmuthu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறி இருக்கும் நிலையில் தற்போது தன் மகனுடன் பிரியாணி சாப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஜி பி முத்து. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதில் நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து தாமாக வெளியேறி இருந்தார். இது அவரின் ரசிகர்கள் பலரையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்பட்டது.

- Advertisement -

அதில் ஜி பி முத்துவும் ஒன்று. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான். இந்த சீசனில் ஜிபி முத்து கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் ஜி முத்து நிட்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜிபி முத்து. கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார்.

அவரை பிக் பாஸும் அழைத்து எத்தனையோ சமாதானம் செய்தார். ஆனாலும், தனக்கு தன் பிள்ளை நினைவாகவே இருக்கிறது நான் போய்தான் ஆக வேண்டும் என்று தன் முடிவில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கூட கமல, ஜிபி முத்துவிடம் இந்த நிகழ்ச்சியால் எந்த அளவு புகழ் வரும் என்பது உங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால், எனக்கு புகழ் பணத்தை விட என் பிள்ளை தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

ஜிபி முத்துவின் இந்த முடிவை கண்டு கமலே ஒரு கணம் நெகிழ்ந்துபோனார். ஜிபி முத்து வெளியேறியதை தொடர்ந்து அவரின் வெளியேற்றம் குறித்து கமல் போட்டியாளர்களிடன் அறிவித்த போது ‘அவர் புறப்பட்டுவிட்டார். அவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் மற்றும் பலன்கள் என்று எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லியும் அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை அதையெல்லாம் விட தன் பிள்ளை என்று சென்று விட்டார். ஒரு பலமான போட்டியாளரை வெளியில் அனுப்பி விட்டோம் என்ற சந்தோஷத்தை விட ஒரு பாசம் உள்ள தந்தையை வெளியே அனுப்பி வைத்திருக்கிறோம் என்று சந்தோஷப்படுவோம்.’ என்று கூறி இருந்தார்.

இதை கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தனது பிள்ளைகளுடன் முத்து பிரியாணி சாப்பிடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ‘நண்பர்களே சற்று முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். பிள்ளைகள் என்னைத்தேடி வாடி விட்டன. என் பிள்ளைகளுக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும். நானும் என் மகன் விஷ்ணுவுடன் சேர்ந்து சாப்பிட போகிறேன்’ என்று கூறி பிள்ளைகளுடன் ஜி.பி.முத்து சேர்ந்து சாப்பிடுகிறார்.

Advertisement