யக்கோய், ஆட்சி மார்னதும் குட்டி கர்ணமா ? நீங்களும் தான ஏளனம் செஞ்சீங்க – ஆர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
1137
harathi
- Advertisement -

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக நேற்று காலை 9.10 மணிக்கு பொறுப்பேற்றார் மு க ஸ்டாலின். . தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி கடந்த (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. இதில் ஆரம்பம் முதலே பல்வேறு தொகுதிகளில் தி மு க தான் முன்னிலை வகித்து வந்தது. . இதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது.

இதையும் பாருங்க : அவங்களுக்கு எப்படி handle பண்னனும்னு தெரியல – மீரா மிதுனுக்கு ஜூலி டிப்ஸ்.

- Advertisement -

இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது. நேற்று முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின் முதல் 5 திட்டங்களில் கையெழுத்திட்டார். ஸ்டாலின் முதலைச்சராக நேற்று பதிவியேற்ற போது துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதியும் கண் கலங்கினர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் பா ஜ க கட்சியை சேர்ந்தவருமான ஆர்த்தி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

அதில், ஸ்டாலின்மனைவியின் உருக்கமான தருணம், அவரது அனைத்து போராட்டங்களையும், அழுத்தங்களையும், தேவையற்ற கருத்துக்களைக் காட்டிலும் அதிக அழுத்தத்தையும் பார்த்தார், ஆனால் இன்று அவரது எல்லா ஜெபங்களும் உண்ணாவிரதங்கள் பலனளித்தன … எவ்வளவு அன்பான n இனிமையான எளிய தாழ்மையான பெண்மணி என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல ஸ்டாலின் குறித்து தெரிவிக்கையில், 50வருட உழைப்பு தொண்டன்ToCM முடியாது என ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டின் உதாரணமாக நிமிர்ந்து நிட்கிறீர் உளமாற பெருமைகொள்கிறேன் இனி இந்த தமிழகமே உங்கள் குடும்பம் நல்லா பாத்துபீங்க நம்பிக்கையிருக்கு என்றும் பதிவிட்டு இருந்தார். ஆர்த்தியின் இந்த பதிவை பார்த்த பலர் கேலி செய்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் நடிகை ஆர்த்தி, திமுக குறித்து பல முறை விமர்சித்து பதிவுகளை போட்டிருக்கிறார். அதே போல இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது திமுக அதனை கடுமையாக எதிர்த்து கொண்டிருந்த போது, ஆர்த்தி இந்தி மொழிக்கு ஆதரவாக ட்வீட் போட்டு இருந்தார். தற்போது ஆர்த்தியின் அந்த பதிவை எல்லாம் நெட்டிசன்கள் பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர்.

Advertisement