அவங்களுக்கு எப்படி handle பண்னனும்னு தெரியல – மீரா மிதுனுக்கு ஜூலி டிப்ஸ்.

0
668
julie

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

Meera Mithun: 15 facts you probably didn't know about the Bigg Boss Tamil 3  contestant- Cinema express

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

இதையும் பாருங்க : கொரோனா ஒரு பக்கம், இதயத்தில் 90 சதவீத அடைப்பு ஒரு பக்கம், உயிர் போய் உயிர் பிழைத்துள்ள அருண் பாண்டியன். (எப்படி ஆகிட்டார் பாருங்க)

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்து தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் லைவ் வந்த போது ரசிகர் ஒருவர், மீரா மிதுன் பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஜூலி, அந்த பிள்ளையை பார்க்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது ஒருவேளை அவங்க நெகட்டிவ் ஈட்டியை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தடு மாறி கொண்டு இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜூலி.

வீடியோவில் 7 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

ரொம்ப நெகடடிவிடியால அவங்களுக்கு ஹாண்டில் பண்ண தெரியல, டக்கு டக்குனு பேசிடராங்க. யாரா இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கூறியுள்ளார். ஜூலியை விட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். கடந்த சில மாதங்களாக இவர் கோலிவுட் மாபியா என்ற பெயரில் விஜய் மற்றும் அஜித்தை கடுமையாக திட்டி தீர்த்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் விஜய் மற்றும் சூர்யாவை தவறாக பேசிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement