10 ஆண்டு விடா முயற்சி. ஒரு வழியாக இந்த தமிழ் பிக் பாஸ் நடிகருக்கு நன்றி தெரிவித்துள்ள சச்சின்.

0
31631
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சிந்து சமவெளி’. இது தான் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார் ஹரிஷ் கல்யாண்.

-விளம்பரம்-

அதன் பிறகு தமிழ் திரையுலகுடன் நமது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகர் ஹரிஷ் கல்யாண், அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார். தெலுங்கில் ‘ஜெய் ஸ்ரீ ராம், காதலி, ஜெர்சி’ ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் ஒரு போட்டியாளராக இருந்தார்.

- Advertisement -

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதன் பிறகு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

ஹரிஷ் கல்யாண் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகராம். 2011-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு (2020) வரை சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 24-ஆம் தேதி, தவறாமல் அவரை டேக் செய்து பிறந்த நாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். இப்போது இந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் அவருக்கு சொன்ன பிறந்த நாள் வாழ்த்துக்கு, சச்சின் டெண்டுல்கர் “நன்றி” என்று பதில் ட்வீட் போட்டிருக்கிறாராம். இதனால் ஹரிஷ் கல்யாண் மிகவும் குஷியாகியுள்ளார்.

-விளம்பரம்-

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் ‘தாராள பிரபு’. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி வெளி வந்தது. இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோயினாக நடிகை தன்யா ஹோப்பும், காமெடியனாக நடிகர் விவேக்கும் நடித்திருந்தார்கள். இப்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, மீண்டும் ‘தாராள பிரபு’ ரிலீஸ் செய்யப்படுமாம்.

Advertisement