ஹரிஷ் கல்யாண் படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன். ரஜினி இதனால் தான் அழைத்தாரா ?

0
8511
sanjay-bharathi
- Advertisement -

காலம் காலமாகவே நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமா உலகிற்கு கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்நிலையில் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தான பாரதி. தற்போது நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி அவர்கள் புது படம் ஒன்றில் நடித்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வந்து உள்ளது. தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்தான பாரதி. மேலும்,இவர் 1986 ஆம் ஆண்டு ‘என்னுயிர் கண்ணம்மா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதோடு இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனரும் ஆவார். மேலும், இவருடைய பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் சந்தானபாரதி அவர்கள் இயக்கிய குணா, மகாநதி போன்ற படங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதோடு இவர் பிரபல இயக்குனர் பி.வாசுவுடன் இணைந்து பல படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

மேலும்,80 கால கட்டங்களில் தொடங்கி தற்போது வரை பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்தான பாரதி என்றும் சொல்லலாம். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகன் தான் சஞ்சய் பாரதி. சஞ்சய் பாரதி முதலில் ஏ.எல்.விஜயிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தற்போது இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவரும் தன்னுடைய தந்தை போலவே இயக்குனர் ஆனார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியானது. இதை பார்த்து ரஜினி அவர்கள் சந்தான பாரதியையும், சஞ்சய் பாரதியையும் பாராட்டி உள்ளார் என தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் பாக்கியராஜ் சொன்ன கருத்து. ட்விட்டரில் பொங்கிய சின்மயி.

- Advertisement -

அது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் புதிய படம் மூலம் சஞ்சய் இயக்குனர் ஆகுகிறார். சஞ்சய் பாரதி அவர்கள் “தனுஷ் ராசி நேயர்கள்” என்ற படத்தை தான் இயக்கி இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘பழசி ராஜா’, திலீப்- சித்தார்த் நடித்த ‘கமர சம்பவம்’, மோகன்லால்-நிவின் பாலி நடித்த ‘காயன்குளம் கொசுன்னி’, தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம்’ ஆகிய படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும்,இந்த படத்தில் ‘பியார் பிரேமா காதல்’ படம் ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

மேலும், இவர்களோடு சஞ்சய் பாரதியும் இந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்து உள்ளார். மேலும்,இந்த ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்ஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கு ஏற்ற ஹீரோயினை கல்யாணம் செய்ய தேடுவது தான் கதை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்று கூறப்படுகிறது. அதோடு குடும்பத்துடன் எல்லோரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என கூறுகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முடியும், அடுத்த ஆண்டு இந்த படம் திரையரங்குக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.

-விளம்பரம்-
Advertisement