பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் பாக்கியராஜ் சொன்ன கருத்து. ட்விட்டரில் பொங்கிய சின்மயி.

0
2289
chinmayi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும்,இயக்குனரும் ஆன பாக்யராஜ் அவர்கள் ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பேசி உள்ளார். மேலும்,இந்த விசயம் சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆர்.பி.எம். சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் “கருத்துக்களை பதிவு செய்”. இந்த படத்தில் புதுமுகங்கள் தான் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை ராகுல் பரம ஹம்சா என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக எஸ். எஸ். ஆர். ஆரியன், கதாநாயகியாக உப்பசனா ஆர்.சி. நடித்து உள்ளார்கள். மேலும்,’கருத்துக்களை பதிவு செய்’ படம் முழுக்க முழுக்க சோசியல் மீடியாவினால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஹாரர் ரேஞ்சில் உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடு இல்லை. மேலும், இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் சினிமா உலகில் பல படங்கள் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், சினிமா பிரபலங்களும் பாலியல் வன்கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் பேசியும் வருகின்றனர். மேலும், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்களுக்கு பஞ்சமே இல்லை. அதில் பெண்கள் கண் மூடித்தனமாக நம்பி சிக்கிக் கொள்கிறார்கள். மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பேசினார். அதில் அவர் கூறியது, “ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது” என்பது போலத் தான் பெண்கள் இடம் கொடுக்காமல் தவறுகள் நடக்க வழி இல்லை.

இதையும் பாருங்க : காதல் திருமணத்தால் ஆல்யா மானஸாவுக்கு நேர்ந்த சோகம். கர்பமாகியும் இப்படி ஒரு பிரச்சனையா.

- Advertisement -

பெண்கள் எல்லா விஷயத்திலும் கவனமாக இருந்து விட்டால் இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மேலும்,ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது.பெண்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடுடன் இருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் சமூகத்தில் நடக்காது. செல்போன் வந்ததும் அவர்கள் தன் நிலைமையை மறந்து விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாலியல் பிரச்சினைக்கு பெண்கள் தான் மூலக்காரணமாக உள்ளார்கள். ஆண்கள் தவறான பழக்கம் வைத்திருந்தாலும் வீட்டை தொந்தரவு செய்வதில்லை. ஆனால், பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்தால் குழந்தையும், கணவரையும் கொலை செய்யத் துணிகிறார்கள் என்று செய்தித்தாள்களில் படித்திருப்போம். அந்த அளவுக்கு பெண்கள் கட்டுப்பாட்டை இழந்து போகிறார்கள். பெண்கள் இடம் கொடுக்காமல் இருந்தால் இந்த மாதிரி தவறுகள் நடக்காது என்று கூறுவதன் மூலம் நான் அவர்கள் குறை சொல்லவில்லை. பெண்களின் பலவீனம் தான் தவறு என்று ஆணித்தரமாக கூறினார்.

இதனைதொடர்ந்து பாடகி சின்மயி அவர்கள் பாக்யராஜ் அவர்கள் கூறியதற்கு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், தற்போது உள்ள நிலையில் ஆண்கள் பெண்களை கற்பழித்தாலும் பெண்கள் மீது தான் குறை சொல்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், பாக்யராஜ் அவர்கள் ஊசி கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என்று கூறி இருந்தார். ஆனால், முள்ளின் மீது சேலைபட்டாலும், சேலை மீது முள் பட்டாலும் கிழியப்போவது என்னவோ சேலை தான் பாதிக்கப்படும். அதுபோல தான் பெண்கள். மேலும், இந்த மாதிரி பிரச்சனையில் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் தவிர ஆண்கள் கிடையாது. சினிமா துறையில் புகழின் உச்சத்தில் இருக்கும் நீங்கள் பெண்களை குறை சொல்வது ரொம்ப வருத்தமான விஷயமாக உள்ளது என்று கூறி பாக்யராஜ் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement