நான் “Eliminate” ஆனால்..என் தலைவர் பதவி இவருக்குத்தான்.! யாஷிகாவிடம் கூறிய மஹத்.!

0
596
Mahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வார நாமினேஷனில் சென்ராயன், பாலாஜி, மும்தாஜ் மற்றும் மஹத் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று ஏற்கனவே தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Mahat-bigg-boss

- Advertisement -

இந்த வாரம் மஹத் வெளியேற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருந்து வந்தது. சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் கூட மஹத்தை கண்டிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கேட்கின்றனர். இதனை வைத்து பார்க்கும் போது மக்கள் மஹத் மீது எந்த அளவிற்கு வெறுப்பில் இருந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும், இந்த வாரம் மஹத் தான் வீட்டின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இந்த வாரம் மஹத் வெளியேற்றுபட்டுவிட்டால் இவரது தலைவர் பதவியை வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் யாருக்காவது அளிக்கவேண்டும். தற்போது அந்த தலைவர் பதவியை யாஷிகாவிற்கு தான் மஹத் கொடுக்கப்போகிறார் என்பது தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

yashika-bigg-boss

சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது மஹத், யாஷிகாவிடம் “நான் வெளியே போனா என்னோட தலைவர் பதவிய உனக்கு தா கொடுத்துட்டு போவேன்”. அப்போ அடுத்த வாரம் உன்ன யாரும் நாமினேட் செய்ய முடியாது” என்று கூறியிருந்தார். இதிலிருந்து அடுத்த வார தலைவி யாஷிகா தான் என்பது உறுதியாகியுள்ளது.

ஒருவேளை யாஷிகா தலைவியாக வந்துவிட்டால் அடுத்த வாரம் அவரை யாரும் நாமினேட் செய்யமுடியாது. இதனால் அவர் அடுத்த வாரமும் சேப். அதே போல இந்த வார நாமினேஷனில் ஏற்கனவே ரித்விகா, ஜனனி, டேனி, பாலாஜி ஆகியோர் நேரடியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே , அடுத்த வாரமும் யாஷிகா நாமினேஷனில் வர வாய்ப்பில்லை.

Advertisement