சனம் ஷெட்டியை கூண்டுக்குள் ஏற்றிய பாலாஜி – ஆதரவாக வாதாடும் ஆரி.

0
2185
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நான்கு வாரத்தை நிறைவு செய்து தற்போது ஐந்தாவது வாரத்தை எதிர்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேறிய நிலையில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார்கள். இதில் அர்ச்சனா நுழைந்த பின்னர் பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட குரூப்பீஸம் பற்றிய பஞ்சாயத்து ஏற்பட்டது. அதேபோல சுசித்ரா உள்ளே நுழைந்த ஒரு சில நாட்களிலேயே இவருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் கொஞ்சம் பனிப்போர் சென்று கொண்டிருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் சுச்சத்ரா, சுரேஷ் சக்ரவர்த்தியை தான் நாமினேட் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜிக்கு ஒரு மிகப் பெரிய சண்டை வெடித்தது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாலாஜி, சனம் ஷெட்டியை தருதலை என்றால் என்ன தெரியுமா என்று கேட்டார். அதற்கு சனம் ஷெட்டி தெரியாது என்று சொல்ல அது நீதான் என்று கூறியிருந்தார் பாலாஜி. இதனால் அங்கிருந்து சனம் ஷெட்டி கோபமாக எழுந்து வந்து விட்டாலர். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து பாலாஜியிடம் ஏன் என்னை தறுதலை என்று கூறினாய் என்று சண்டையிட்டார் சனம் ஷெட்டி .

- Advertisement -

பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டை அதிகரித்தது,, ஒரு கட்டத்தில் பாலாஜி, சனம் ஷெட்டியை வாடி போடி என்று பேசும் அளவிற்கு மாறிவிட்டது. மேலும், சனம் ஷெட்டியிடம் என்னை பின்னால் ஏன் உதைத்தார் என்று பாலாஜி கேள்வி எழுப்பினார். ஆனால் சனம் செட்டி அது பிரச்சினை என்றால் அப்போதே கேட்டிருக்க வேண்டியதுதானே இப்போது வந்த என்னை உதைத்து கொள், இங்கேயே முடித்து விடலாம் என்று கூறியிருந்தார். இந்த பிரச்சினை தான் நேற்றைய நிகழ்ச்சியில் மிகவும் பெரிய பிரச்சினையாக இருந்தது.

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார். மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் விஷயத்தில் ஆரி, சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். நேற்று கூட அவர் சனம் ஷெட்டிக்கு ஆதரவாகத்தான் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement