49 நாட்கள் உள்ளே இருந்து இசைவாணி சம்பாதித்த மொத்த தொகை எவ்ளோ தெரியுமா ?

0
201
isaivani
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதுவரை 52 நாட்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா, நதியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா இசைவாணி என்று 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதில் ஏற்கனவே வெளியேறிய அபிஷேக்கை மீண்டும் வைல்டு கார்டு மூலம் கொண்டு வந்துள்ளனர்.

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் அமீர் என்ற புதிய போட்டியாளரும் கலந்துகொண்டார். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல்வேரு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் இசைவாணியும் ஒருவர். கானா பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இசைவாணி. அதிலும் பெரிய கரி என்ற பாடலை பாடியதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது என்று சொல்லலாம். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இவருடைய கனவு லட்சியம்.

இதையும் பாருங்க : ‘அக்னி கலசத்திற்கு பதிலாக இன்ஸ்பெக்டரின் ஜட்டி ‘ – எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் ப்ளூ சட்டை பகிர்ந்த புகைப்படம்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் 2020ஆம் ஆண்டு இவர் இசையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசைவாணி தேர்வு செய்து பிபிசி பெருமைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இசை வாணி வெளியேறி இருந்தார். இருப்பினும் இசைவாணி சீக்ரெட் ரூமில் வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.

வழக்கமாக பிக் பாஸில் பங்கு பெரும் போட்டியாளர்களுக்கு அவரவர் பிரபலத்திற்கு ஏற்றார் போல வார சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த சீசனில் பங்கேற்ற இசைவாணிக்கு வாரம் 1 லட்சம் சம்பளம் பேசப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் பிக் பாஸில் வீட்டில் இவர் மொத்தம் 49 நாட்கள் இருந்துள்ளார். இதை வாரமாக கணக்கிட்டால் மொத்தம் 7 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ள இசைவாணி 7 லட்ச ரூபாய் சம்பளத்துடன் பிக் பாஸ் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement