இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி கலசம் படம் காட்டப்பட்டது.
இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் உண்மையான செங்கேணி பார்வதிக்கு நியாயம் கிடைக்க போராடிய வன்னியரின் பெருமையை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், சூர்யாவிற்கு எதிராக பல வன்னிய அமைப்புகள் புகார் அளித்து வருகிறது.
இதையும் பாருங்க : 12 வயதில் தாய் தந்தையை இழந்த மாணவி, இன்று ராணுவத்தில் மேஜர் மருத்துவர் – அற்புதம் செய்த அகரம் அறக்கட்டளை.
சமீபத்தில் கூட நடிகர் சூர்யா, ஜோதிகா மீது நாமகிரிப்பேட்டை, பா.ம.க.,வினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். மேலும், சூர்யாவிற்கு ஆதரவாக மதுரையில் பழங்குடி மக்கள் சாலையில் பாம்பு,, எலிகள் போன்றவற்றை வைத்து நூதன போராட்டம் நடத்தி இருந்தனர். இப்படி ஜெய் பீம் பட சர்ச்சைகள் ஓயாத நிலையில் யூடுயூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி இருக்கிறார்.
சமீபத்தில் தனது பக்கத்தில் ஜெய் பீம் படத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அக்னி கலசம் காலண்டருக்கு பதிலாக ஜட்டி இடம்பெற்று இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதே போல ஜெய் பீம் சர்ச்சை குறித்து அந்த படத்தின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கை குறித்து விமர்சித்துள்ள மாறன் என்று பதிவிட்டுள்ளார்.ஜெய்பீம் அக்னிக்கலச காலண்டர் சர்ச்சைக்கு இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். அன்புமணி எதிர்பார்த்தபடி மன்னிப்பு கேட்கவில்லை. குருமூர்த்தி என பெயர் வைத்தது பற்றி எதுவும் சொல்லவில்லை. இது கெத்தா அல்லது சமாளிப்பா? மக்கள் குழப்பம் என்று பதிவிட்டுள்ளார்.