லியோ படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பிக் பாஸ் ஜனனி பகிர்ந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.
இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
லியோ படம்:
ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் வசூலை தாண்டி லியோ படம் வெற்றியடையும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
I am very happy & proud even Thalapathy Vijay is acting like a dream but it is true, this film is my first film and I am very thankful to @Dir_Lokesh Sir. Everglad for giving me this opportunity ❤ And gave me a great experience ✨#Leo #ThalapathiVijay #LokeshKanagaraj #Janany pic.twitter.com/d4r0CoaTwz
— Janany ❁ (@imjananykj) October 19, 2023
பிக் பாஸ் ஜனனி பதிவு:
இந்த நிலையில் லியோ படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜனனி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிக் பாஸ் ஜனனி நடித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், விஜய் சார் உடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமும், பெருமையாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவருக்கு நன்றி கூறுகிறேன் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
பிக் பாஸ் ஜனனி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு மூலம் பிடித்தவர் ஜனனி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத புது நபர்களில் ஜனனியும் ஒருவர். இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனனிக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்தது. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தது.
ஜனனி நடித்த படம்:
இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். நிகழ்ச்சியின் இவர் அமுதவாணனின் கைப்பாவையாக இருந்தார் என்று பல சர்ச்சைகள் எழுந்தது. இருந்தாலும் ஜனனி முழு முயற்சியுடன் விளையாடியிருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தில் ஜனனி நடித்த ரோல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.