‘மத்தவங்களுக்கு குறும்படம் போட வைக்கிறேன்’ – பிக் பாஸுக்கு போகும் முன்னே வாயடிய ஜூலியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
254
julie
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனத்தாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன்.

- Advertisement -

காதலன் சர்ச்சை :

இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. இறுதியாக ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். சமீபத்தில் கூட ஜூலி, தன் காதலன் தன்னை டார்ச்சர் செய்வதாக போலீசில் புகார் அளித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

BB அல்டிமேட் :

இப்படி ஒரு நிலையில் ஜூலி மீண்டும் பிக் பாஸில் கலந்துகொள்ள இருக்கிறார். பிக் பாஸ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

சினேகனை தொடர்ந்து ஜூலி :

இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் இந்நிகழ்ச்சி குறித்து கமலஹாசன் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30 ஆம் தேதி 6. 30 மணிக்கு துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது.

ஜூலி என்ட்ரி ப்ரோமோ :

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஓவ்வொரு போட்டியாளர்களின் விவவரங்களை ஹாட் ஸ்டார் தளம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த சீஸனின் முதல் போட்டியாளராக சினேகன் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படி ஒரு நிலையில் ஸ்நேகனை தொடர்ந்து தற்போது அடுத்த போட்டியாளராக ஜூலி கலந்துகொள்ள இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதற்க்கான வீடியோ ஒன்றும் ஹாட் ஸ்டார் தளம் வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பை கேட்ட நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா ? இப்போதே ஜூலியை கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக ஜூலியின் என்ட்ரி வீடியோவில் ஜூலி, இந்த முறை எல்லாரையும் ஓட வைக்கிறேன், மத்தவங்களுக்கு குறும்படம் போட வைக்கிறேன் என்று ஜூலி பேசியுள்ளதை பார்த்து பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement