தலைவி மாதிரி வர முடியாது, இருந்தாலும் அவர மாதிரி Try பண்ணி இருக்கேன் – சில்க் ஸ்மிதாவின் இந்த லுக்கை ரீகிரி யேட் செய்துள்ள காஜல்.

0
531
silk
- Advertisement -

சமூக வலைதளத்தில் போட்டோ ஷூட் மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ரம்யா பாண்டியன் துவங்கி குக்கு வித் கோமாளி தர்ஷா குப்தா வரை அனைவரும் போட்டோ ஷூட் மூலம் பிரபலமானவர்கள் தான். அதிலும் ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் தான் அதிகம் பிரபலமடைந்தார். இவரை தொடர்ந்து பல நடிகைகள் மொட்டை மாடி போட்டோ ஷூட்டை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக போட்டோ ஷூட் நடத்தி அசத்தி வருகிறார் பிக் பாஸ் புகழ் காஜல் பசுபதி.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-3-1024x760.jpg

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த வீரப்பனின் அண்ணன் திடீர் மரணம் – என்ன காரணம் ?

- Advertisement -

பல படங்களில் நடித்துள்ள காஜல் :

மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல்.

சாண்டியுடனான பிரிவு :

இது குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். சாண்டியின் பிரிவு குறித்து பேசுகையில் ‘நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

உடல் எடையை குறைத்த காஜல் :

இடையில் உடல் எடை கூடி கொஞ்சம் பருமனாக இருந்த காஜல் சமீபத்தில் நம்ப முடியாத அளவு உடல் எடையை குறைத்து இருந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள். இப்படி ஒரு நிலையில் சில்க் ஸ்மிதாவை போன்று ஒரு போஸை ரீ கிரியேர்ட் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள காஜல் தலைவி மாதிரி வர முடியாது, இருந்தாலும் அவர மாதிரி Try பண்ணி அவருக்கு சமர்ப்பணம் செய்து இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் திருமண சர்ச்சை :

சாண்டியை பிரிந்த பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார் காஜல். சமீபத்தில் கூட தனக்கு இரண்டாம் திருமணம் நடைபெற போவதாக கூறி இருந்தார் காஜல். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அது வேடிக்கையாக போடப்பட்ட காப்பி பேஸ்ட் பதிவு என்று கூறி இருந்தார் காஜல். ஆனால், இவரது ரசிகர்கள் பலரும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று கூறிக்கொண்டு தான் வருகின்றனர்.

Advertisement