இதுவும் உங்கள் திட்டத்தில் ஒரு பகுதியா.! கவின் வெளியேறியதற்கான காரணத்தை கேட்கும் கமல் .!

0
3322
kavin-kamal
- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறிய செய்திதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பிக்பாஸ் அறிவித்திருந்த 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை எடுத்துக்கொண்டு கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.கவின் வெறியேறியது சக போட்டியாளர்களும் அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சக போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் அவர்களின் பேச்சைக் கேட்காத கவின், நான் இந்த முடிவை தெளிவாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார். கவின் வெளியேறியதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கவின் தனது தாயை ஜாமினில் எடுத்ததாகவும் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இன்று கவின் பிக் பாஸ் மேடையில் தோன்றியுள்ளது இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ மூலம் உறுதியானது.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கவின் எதற்காக வெளியேறினார் என்ற காரணத்தை கேட்டுள்ள கமல், நீங்கள் பணத்திற்காக வெளியேறியது போன்று எனக்கு தெரியவில்லை. எனவே, இதுவும் உங்கள் திட்டத்தில் ஒரு பகுதியா என்று கேட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement