இந்தியாவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். இதை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது
கன்னட மொழியில் பிக் பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தான் வழங்கி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் விதி மீறல் காரணமாக பிக் பாஸ் சீசன் 12 வீட்டிற்கு அரசாங்க அதிகாரிகள் சீல் வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான செட் பிடாடி தொழில்துறை பகுதியில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோஸ் அண்ட் அட்வென்ச்சர்ஸில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
கன்னட பிக் பாஸ் 12:
இப்படி இருக்கும் போது சமீபத்தில் இந்த பிக் பாஸ் செட் போடப்பட்ட இடத்தில் கழிவுநீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பதை எல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அப்போது செட் அமைக்கப்பட்டுள்ள பகுதியின் சுற்றுப்புறத்திலேயே கழிவு நீர் வெளியேற்றுவதை அதிகாரிகள் கண்டறிந்தார்கள். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிக அமைப்பினர் ஸ்டுடியோக்கு வெளியே நின்று ஆர்பாட்டமெல்லாம் நடத்தி இருந்தார்கள்.

அதிகாரிகள் ஆய்வு:
இங்கு கழிவு பிரச்சினைகளை தவிர பிளாஸ்டிக் கப், காகித தட்டுகள் போன்ற திடக்கழிவுகளும் முறையாகவே பராமரிக்கப்படவில்லை. வேஸ்டேஜ் எல்லாமே செட்டிற்கு வெளியே தூக்கி எறியப்படுகிறது. இதனால் மாசு கட்டுப்பாடு ஏற்படும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். பின் இது தொடர்பாக கர்நாடக மாநில மாசு கட்டுப்பாடு வாரியமும் நடவடிக்கை எடுத்தது. கழிவுகளை நிர்வகிப்பதற்கு அல்லது கழிவுநீர்
சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கு தெளிவான செயல்முறை எதுவும் இல்லை.

பிக் பாஸ் வீட்டுக்கு சீல்:
இதனால் கன்னட பிக் பாஸ் சீசன் 12 அமைக்கப்பட்டிருந்த செட்டை அதிகரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அப்போது சுற்றுச்சூழல் விதிமீறலில் ஈடுபட்டதாக சொல்லி பிக் பாஸ் செட் அமைக்கப்பட்ட இடத்தில் அனைத்து விதமான படபிடிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது. பின் கன்னட பிக் பாஸ் செட்டுக்கு அதிகாரிகளும் சீல் வைத்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் சீக்கிரமாகவே வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.






