நீ நிறுத்தவே மாட்டியா.! கஸ்தூரி பதிவால் மீண்டும் கடுப்பான வனிதா.! வச்சி செய்யும் கஸ்தூரி.!

0
2639
kasturi-vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இடையில் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது நிலையில் கஸ்தூரி வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் . இதனால் இதில் பல்வேறு கலவரங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரையும் வனிதா தூக்கி சாப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போது வனிதாவை வாத்து வனிதா என்று குறிப்பிட்டு விட்டார் என்று வணிதாவிற்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது. ஆனால், அதன் பின்னர் இருவரும் இதை பற்றி பேசி சமாதானம் ஆகினர்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியதை குறித்து வனிதா ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.மேலும், இந்த வாரம் தனது ஆதரவு லாஸ்லியாவிற்கு என்றும் பதிவிட்டிருந்தார் வனிதா. அதே போல சனம் ஷெட்டி, தர்ஷனால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றதாக கூறியிருந்தார். ஆனால் , அது பொய்யான தகவல் என்று சனம் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் வனிதா, இனி பிக் பாஸ் பற்றி எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்று பதிவிட்டார். இதனை கலாய்க்கும் விதமாக கஸ்தூரி , இப்போதாவது உங்களுக்கு நல்ல புத்தி வரட்டும். எனக்கு தற்போது ஞாபகம் இருக்கிறது நான் வனிதாவிடம் இது வெறும் கேம்ஷோ மட்டும்தான் எதற்கு சண்டை இடுகிரீர்கள் என்று கேட்டதற்கு இது ஒரு ரியாலிட்டி ஷோ என்று என்னிடமே கத்தினார். ஆனால், இறுதியாக அவரை இது ஒரு டிராமா என்று கூறியுள்ளார் என்று நக்கலாக பதிவிட்டுள்ளார் .கஸ்தூரியின் இந்த பதிவை கண்டு கடுப்பான வனிதா, நீ நிறுத்தவே மாட்டியா , பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உங்களை பொழுதுபோக்கு கொள்ளத்தான் நீங்கள் வந்தீர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவருமே ஒரு பொழுது போக்கத் தான் கண்டு களித்து வருகின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார் வனிதா

கஸ்தூரி பதிவிட்ட அந்த பதவிவில், என்னதான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா ! என்று பதிவிட்டதோடு அதன் அருகில் ஒரு வாத்து எமோஜி ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இதனால் வணிதாவிற்கும் கஸ்தூரிக்கும் ட்விட்டரில் மோதல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement