கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தது குறித்து கஸ்தூரி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என பல சூப்பர் ஹிட் படங்களில் கஸ்தூரி நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.
மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். பின் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி, சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ என்ற படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து இருந்தார் கஸ்தூரி . அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருந்தது.
இதையும் பாருங்க : மேடையில் கெட்ட வார்த்தையில் பேசிய ஹரி – ராஜமௌலி, பிரசாந்த் நீள் உடன் வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு.
பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி:
பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால், ட்விட்டரில் அவர் பேசிய பேச்சுக்கும் பிக்பாஸில் இவர் இருந்ததற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதது போலத்தான் இருந்தது. டுவிட்டரில் எல்லோரையும் வறுத்து எடுத்த கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் புள்ள பூச்சியாக இருந்தார். அதிலும் இவருக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இவரால் வனிதாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
சோசியல் மீடியாவில் கஸ்தூரி:
மேலும், இவருக்கு பிக்பாஸில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சீக்கிரமாகவே வெளியேற்றப்பட்டு இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் சமூக பிரச்சினைகள் குறித்து எப்போதும் தைரியமாக பதிவிட்டு வருவார். இவர் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் தவறு என்றால் ட்விட்டரில் தட்டிக் கேட்டு இருக்கிறார்
உள்ளாடை விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்:
அதே போல ட்விட்டரில் தன்னை விமர்சிப்பவர்களை அப்படியே பதிலடி கொடுத்து விடுவார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் குறித்து கஸ்தூரி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அந்த விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களையும் பொது மக்களையும் கவரும். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கேஎல் ராகுல் உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
கஸ்தூரி போட்ட டீவ்ட்:
இந்நிலையில் இந்த விளம்பர புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகை கஸ்தூரி கூறியிருப்பது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றாலே அவர்களை கோலா, சிப்ஸ், ஆன்லைன் கேம் போன்ற விளம்பரங்களில் தான் பார்த்திருக்கிறோம். பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை விளம்பரமும் செய்து வருகின்றனர். ஆனால், உள்ளாடை விளம்பரத்தில் கேஎல் ராகுல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஒரு குத்து சண்டை வீரர் போல் அவர் காட்சி அளிக்கிறார். இந்த விளம்பரம் பல ஆண்களை கவரும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.