உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘பத்தல பத்தல’ பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது கமல் படத்தில் நடித்த நடிகையே இந்த பாடல் குறித்தும் கமல் குறித்தும் விமர்சித்து இருக்கிறார். நடிகர் கமல் இறுதியாக ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துஅலர். கிட்டதட்ட 4 ஆண்டுகள் கழித்து கமல் படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் பட்டத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக விஜய்சேதுபதி நடித்து உள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய வரிகள் :
இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே போன்ற வரிகளும் குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு… குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே போன்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கஸ்தூரி போட்ட பதிவு :
இப்படி ஒரு நிலையில் இந்த பாடலை விமர்சித்து நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கஸ்தூரி கமலுடன் ‘இந்தியன்’ படத்தில் கமலின் மகளாகவும் தங்கையாகவும் நடித்து இருந்தார். அது போக கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் தோற்றத்தை வைத்து கலாய் :
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி பல பிரபலங்களை விமர்சித்து படு தைரியமாக ட்வீட்களை போட்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘பத்தல பத்தல’ பாடல் குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் கஸ்தூரி ‘சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல.
கமல் மீது அளிக்கப்பட்ட புகார் :
கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு’ என்று பதிவிட்டு உதயநிதியின் Red Gaint Moviesஐயும் கமலையும் tag செய்து இருக்கிறார். ஏற்கனவே இந்த பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வரிகளும், ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் வரிகள் அமைந்து உள்ளதாகவும், அந்த பாடல் வாிகளை நீக்க கோரியும் கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.