சின்ன வயதில் ரஜினியை சிகரெட் விடச் சொன்னேன் – மாநகரம் நடிகர்

0
536
- Advertisement -

தென்னிந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. ரஜினிகாந்ந் திரை வாழ்க்கையை தொடங்கியது முதலே தன்னுடைய கடின உழைப்பின் தொடங்கியது படிப்படியாக வில்லன் நடிகரில் இருந்து இன்று இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தன்னை தெரியும் படி பிரபலமாகியுள்ளவர்தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், வசந்த ரவி, யோகிபாபு, விநாயகன் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படமானது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு திரையில் வெளியாகும் எனக்க தகவல்கள் கிடைத்துள்ளன. சினிமாவில் இவரில் நடிப்புக்கு மட்டுமல்ல இவரில் தனித்தன்மையான சிகரெட் பற்றவைக்கும் ஸ்டைலுக்கும் பலரும் அடிமையாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் சமீப காலங்களில் ரசிகர்களின் நலன் கருதி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை தன்னுடைய படத்தில் தவிர்த்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படி நிலையில் தான் மாநகரம் பட நடிகரான சந்தீப் கிஷான் ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று சிறு வயதிலேயே கூறினாராம்.

சந்தீப் கிஷான் :

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே முன்பாகவேய தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் சந்தீப்.

-விளம்பரம்-

சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று கூறினேன் :

இப்படி பட்ட நிலையில் தான் சந்தீப் கிஷன் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் தான் சிறு வயதாக இருக்கும் போது ராகவேந்திய மண்டபத்தில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்தார். என்னுடை வீட்டு அருகே உள்ள நபர் அங்கே நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பில் நடன கலைஞராக இருந்தார். அவருடன் நான் சென்றிருந்தேன். அப்போது ரஜினிகாந்திடம் சென்று அங்கிள் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுங்கள் என்று கூறியிருந்தேன்.

நானே சிகரெட் அடிக்கிறேன் :

அது மிகவும் சிறு வயதாக இருக்கும் போது தெரியாமல் நடந்த நிகழ்வு தான் என்று கூறலாம். இப்போது நானே சிகரெட் குடிப்பேன். நான் இந்த விஷியத்தை இப்போது சொல்லும்போது கூட நமே சிகரெட் அடிப்போம் நாம் எப்படி சொல்வது என்று தோன்றியது. நான் கடந்த மூன்று வருடமாக சிகரெட் பிடித்து வருகிறேன். தற்போது சந்தீப் கிஷன் மைக்கில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் மேனன், வரலட்சிமி சரத்குமார் என பலரும் நடித்துள்ள இப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

Advertisement