பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்பட்டு இருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே மிகவும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இந்த நிலையில் கஸ்தூரி வை ல்டு கார் டு போட்டியாளராக கலந்து சில வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் இதனால் இதில் பல்வேறு கலவரங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ட்விட்டரில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியவை கஸ்துரி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவர் சென்ற பிறகு எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை இதனால் நாமினேட் ஆனா முதல் முறையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கஸ்தூரி.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் வெளியில் இதற்குப் பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்தப் பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்களை குறித்தும் பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார் அந்த பேட்டியில் பேசிய அவர், ஹவுஸ்மேட்ஸ்கள் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் போல்தான் இருக்கின்றனர்.
அவர்களை ஆட்டி வைப்பது பிக்பாஸ்தான். மக்களுக்கு இதுதான் தேவை என முடிவு செய்து பிக்பாஸ் சிலவற்றை மட்டுமே காட்டுகிறார். பிக்பாஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன கொடுக்க நினைக்கிறார் என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் மனிதராகவும் மனித தன்மையுடனும் நடந்து கொள்வது சேரன் மட்டும்தான். மற்றவர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை. மதுமிதா பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெரினும் லாஸ்லியாவும்தான். முக்கியமாக சம்பந்தப்பட்டவர் ஷெரின்தான். நீங்கள் மீண்டும் மீண்டும் என் வாயை கிளறீங்க. நான் பேசியதை நீங்க காட்டவில்லை.